ஜி.வி.பிரகாஷ், சைந்தவி பிரிவுக்குக் காரணம் இந்த நடிகையா?

காதலித்து கல்யாணம் முடித்தவர்களும் விவாகரத்து செய்வது அதிகரித்து வருகிறது. சினிமா உலகில் ஆதர்ச ஜோடியாக கருதப்பட்ட ஜி.வி.பிரகாஷும் பாடகி சைந்தவியும் 11 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்திருப்பது பலரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.


காதலித்து கல்யாணம் முடித்தவர்களும் விவாகரத்து செய்வது அதிகரித்து வருகிறது. சினிமா உலகில் ஆதர்ச ஜோடியாக கருதப்பட்ட ஜி.வி.பிரகாஷும் பாடகி சைந்தவியும் 11 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்திருப்பது பலரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

இந்து குறித்து ஜி.வி.பிரகாஷ், ‘நானும் சைந்தவியும் 11 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிய முடிவு செய்திருக்கிறோம். எங்களுடைய மன அமைதிக்காகவும், நன்மைக்காகவும், அதே நேரம் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பரஸ்பர மரியாதை அப்படியே நீடிக்கும்.

மிகவும் தனிப்பட்ட இந்த் மாற்றத்தின் போது எங்களுடைய பிரைவசியை மதித்து புரிந்துகொள்ளுமாறு ஊடகத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் தனித்தனியாக வளர்ந்து கொண்டிருப்பதை மனதில் கொண்டு, இது எங்கள் இருவருக்கும் சிறந்த முடிவாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த கடினமாக காலகட்டத்தில் உங்களுடைய புரிதலும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி” என்று தெரிவித்துள்ளார். இதே போன்ற அறிவிப்பை சைந்தவியும் வெளியிட்டுள்ளார்.

பள்ளிகாலம் முதலே காதலித்து வந்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் 2013ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் ஒரு திருடன் பெயர் கொண்ட படத்தில் நடித்தார். அந்த படத்தின் நாயகியே ஜி.வி.பிரகாஷை களவாடிவிட்டார் என்று பலரும் குற்றம் சாட்டி வரும் நிலையில், அனைவரும் மெளனம் சாதிக்கிறார்கள்.