ஒருவழியா விஜயகாந்துக்கு பதமபூஷன் கிடைக்கப்போகுது

விஜயகாந்த் மறைவுக்குப்பிறகு அவரை கெளரவிக்கும் வகையில் மத்திய அரசு பத்மபூஷண் விருது வழங்கியது. தமிழக நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேரவில்லை. இதனால், கடந்த வாரம் நடந்த விழாவில் விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்ட பத்மபூஷண் விருது வழங்கப்படாதது சர்ச்சையாக மாறியது.

இது அரசியல் ரீதியான சர்ச்சையாக மாறியதும் இப்போது அந்த விருதை வழங்க மத்திய அரசு முடிவெடுத்து, 9ம் தேதி விருது வழங்குவதாக அறிவிப்பு செய்துள்ளது.

இதுகுறித்து பிரேமலதா, ‘மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு வரும் மே 9ம் தேதி பத்ம பூஷண் விருது வழங்கப்பட உள்ளது’ என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர், "பத்ம பூஷண் விருது பெற மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து, அந்த விருதைப் பெற நானும் விஜய பிரபாகரனும் டெல்லிக்கு செல்கிறோம்" என்றும் கூறியிருக்கிறார்.

எப்படியோ தமிழக மக்களின் எண்ணத்துக்கு மதிப்பு தரும் வகையில் விஜயகாந்திற்கு விருது வழங்கினால் சரி.