அட்சய திருதியையில் தங்கம் வாங்கி ஏமாறாதீங்க மக்களே

அட்சய திரிதியை என்பது மதம் மீது மக்களுக்கு இருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி, வியாபாரிகள் நடத்தும் கோல்மால் என்ற உண்மையை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.


அட்சய திரிதியை என்பது மதம் மீது மக்களுக்கு இருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி, வியாபாரிகள் நடத்தும் கோல்மால் என்ற உண்மையை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

இந்த ஆண்டும் வியாபாரிகளின் ஏமாற்று வேலையை நம்பி யாரும் ஏமாறாதீர்கள் இந்த மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்களே உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

கடந்த சில ஆண்டுகளாக நிச்சயம் அட்சய திரிதியைக்கு கடன் வாங்கியாது தங்கம் வாங்கியிருப்பீர்கள். அப்பட் தங்கம் வாங்கிய எத்தனை பேர் வீட்டில் தங்கம் பொங்கி வழிந்தது. அந்த தங்கம் வாங்கிய பிறகு என்னவெல்லாம் நடந்தது என்று யோசித்துப் பாருங்கள்.

நீங்கள் மட்டுமல்ல, உங்களைப் போன்று அட்சய திரிதியை நம்பிக்கையைப் பயன்படுத்தி வீட்டில் இருந்த பழைய நகைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்துவிட்டு கூடுதலாக கொஞ்சம் பணம் போட்டு வாங்கியவர்கள் எல்லோரும் இப்போது செல்வத்தில் மிதக்கிறார்களா..?

ஆனால், நகைக் கடைக்காரர்கள் மட்டும் செல்வம் மேல் செல்வம் என்று வளர்ந்துகொண்டே இருக்கிறார்கள். எனவே, மத நம்பிக்கை முக்கியம் என்றால் இன்று மஞ்சள், உப்பு போன்ற பொருட்களை வாங்கி வீட்டில் வையுங்கள்.

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைக் கொண்டு ஒரு கிராம், இரண்டு கிராம் தங்கம் வாங்குவது நிச்சயம் உங்களுக்கு இழப்பையே கொண்டுவரும். அதை விற்பனை செய்யப்போனால் கழிவுகள் போக ரொம்பவும் நஷ்டம் வரும்.

ஆகவே, தங்க நகை வியாபாரிகளின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்காதீர்கள். எந்த கடவுளும் தங்கம் வாங்கும்படி உங்களிடம் சொல்லவே சொல்லாது. தங்கம் வாங்கினால் தான் உங்களுக்கு நன்மை செய்வேன் என்று சொன்னால் அது கடவுளே அல்ல.