திருமணத்திற்கு முன்பே காதலியை கர்ப்பமாக்கிய ஹர்திக் பாண்டியா..! நேற்று இரவு வெளியான ஷாக் தகவல்!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா தனது காதலி நடாஷா கர்ப்பமாக உள்ளதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆல்-ரவுண்டராக விளங்குபவர் ஹார்திக் பாண்டியா ஆவார். இவர் தனது அதிரடி ஆட்டத்தால் மிகக்குறுகிய காலத்திலேயே உலக அளவில் மிகவும் பிரபலமானார். ஐபிஎல் இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் பல்வேறு இக்கட்டான நிலைகளில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியை ஈட்டித் தந்து உள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா தனது காதலி நடாஷா ஸ்டான்கோவிக் என்பவரை நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார். இந்நிலையில் திருமணத்திற்கு முன்பே ஹர்திக் பாண்டியா தனது காதலி நடாஷா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு மீண்டும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மேலும் ஹர்திக் பாண்டியா அந்த பதிவில் நடாஷாவும் நானும் சிறந்த பயணத்தை மேற்கொண்டு உள்ளோம். அது இன்னும் சிறப்பாக அமைய உள்ளது. எங்கள் வாழ்வில் புது உறவை வரவேற்க தயாராக உள்ளோம். உங்களின் ஆசி மற்றும் வாழ்த்துக்களுடன் வாழ்வின் புதிய பரிமாணத்திற்கு செல்ல காத்துக்கொண்டிருக்கிறோம் எனவும் அந்த பதிவில் அவர் கூறியிருந்தார். கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா வின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.