வயசாடா முக்கியம்..! அக்கா நடிகை தான் வேணும்..! சிரிப்பு ஹீரோவுக்கு சின்ன வீடானா பெரிய ஹீரோயின்!

ஒரு காலத்தில் உச்ச நட்சத்திரங்களுக்கு எல்லாம் ஜோடியாக நடித்து கொடி கட்டி பறந்த நடிகை பீல்ட் அவுட் ஆனதால் சிரிப்பு ஹீரோ ஒருவருக்கு சின்ன வீடான சமாச்சாரம் தான் இது.


சுமார் 20 வருடங்கள் தமிழ் சினிமா மட்டும் அல்ல தென்னிந்தியாவையே உச் கொட்ட வைத்தவர் நம்ம ஹீரோயின். அவர் காலத்தில் அவருடன் நடிக்காத ஹீரோக்களே இல்லை என்று கூறலாம். பழம் தின்னு கொட்டை போட்ட உச்ச ஹீரோக்கள் முதல் பீல்டுக்கு புதிதாக வந்து வெற்றிக் கொடி நாட்டிய ஹீரோக்கள் வரை நம்ம ஹீரோயினுடன் ஜோடி போட அவ்வளவு ஆர்வம் காட்டுவார்கள்.

மங்கலகரமான முகம், நேர்த்தியான உடல் வாகு, திரையுலகை புரிந்து கொண்ட சூட்சுமத்தால் அந்தக்காலத்திலேயே 20 வருடங்களாக பீல்டில் இருந்தவர். வயதுக்கு வந்த மறுநாளே நம்ம ஹீரோயின் நடிக்க வந்துவிட்டதாக கூறுவார்கள். தமிழ் சினிமாவை பொறுத்தவரை அக்கா - தங்கை என இருவரும் ஒரே நேரத்தில் டாப்பில் இருந்தது அப்போது முதல் இப்போது வரை அவர்கள் இருவரும் தான்.

இவர்களில் அக்கா தான் நம்ம ஹீரோயின். ஹீரோக்களுக்கே கனவுக்கன்னியாக இருந்த நம்ம ஹீரோயினுக்கு ஆண் ரசிகர்களை பற்றி சொல்லியே ஆக வேண்டுமா? அப்படி தனது பருவ காலத்தில் நடிகையின் வெறித்தனமான ரசிகராக இருந்தவர் தான் நம்ம காமெடி ஹீரோ. நம்ம ஹீரோ இப்போது நம் வீட்டில் ஒருவர்.

இவரை பிடிக்காதவர்களே இல்லை எனலாம். ஹீரோ ஸ்கீரினில் வந்தாலே சிரிப்பொலி பறக்கும். ஒரு காலத்தில் சைடு ஆக்டராக இருந்து பிற்காலத்தில் சாரின் கால்ஷீட்டுக்காக உச்சநட்சத்திரங்கள் எல்லாம் காத்துக்கிடந்தது தனிக்கடை, அரசியல் ஆசையால் வீணாய்போய் வீட்டில் இருந்தாலும் நடிகர் சம்பாதித்த பணத்தால் தற்போதும் செழிப்பு தான்.

தற்போது ஹீரோ என்றாலும் நடிகர் காமெடியனாக பீக்கில் இருந்த காலகட்டம் அது. ஹீரோக்களுக்கு உள்ள மரியாதை நம்ம காமெடியனுக்கும் உண்டு. இதனால் படத்தில் தனக்கான ஜோடியை தானே தேர்வு செய்வார். தான் பருவ வயதில் இருந்த போது ஹீரோயினாக இருந்தவர்களை எல்லாம் தனக்கு ஜோடியாக்கு லாலி பாட ஆரம்பித்தார்.

இப்படித்தான் நமது அக்காள் நடிகை நம்ம ஹீரோவுக்கு அறிமுகம். சூட்டிங் ஸ்பாட்டில் நடிப்பதை விட்டுவிட்ட ஓல்டு நாயகியை சுற்றி சுற்றி வந்த காமெடியிடம் எண்ண அண்ணே இது உங்க லெவலுக்குஇப்போ இளம் ஹீரோயின்களே காத்துக் கொண்டிருக்க அரைக்கிழவியுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறிர்கள் என கேட்க, போங்கடா டேய், வயசா முக்கியம், அந்த காலத்துல நடிகையை தியேட்டர்ல பார்த்தே.. என்று முடித்துக் கொண்டார்.

பிறகு நடிகைக்கு தனியாக வீடு எடுத்துக் கொடுத்து சின்ன வீடாக வைத்துக் கொண்டார். நடிகைக்கும் கல்யாணம் போன்ற குடுப்பணை இல்லாததால் காமெடி அரவணைப்பிலேயே தற்போதும் தொடர்வதாக பேச்சு.