விஜயமான ஹுரோவை கழட்டிவிட்ட ராசியான நாயகி..! இனி எல்லாம் புதுசு கண்ணா புதுசு தானாம்..!

இப்போதெல்லாம் அந்த ஹீரோவின் கன்ட்ரோலில் பிரபல ஹீரோயின் இல்லை என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.


கன்னட சினிமாவிலிருந்து தெலுங்கு சினிமாவிற்கு இறக்குமதியானவர் இந்த பிரபல நடிகை. தமிழில் இவர் இதுவரை ஒரு திரைப்படம் கூட நடிக்காவிட்டாலும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட நாயகியாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் ஒரு திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவும் தெலுங்கில் இருந்து டப்பிங் செய்யப்பட்டு இறக்குமதியான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர் தொடர்ந்து பிரபல இளம் ஹீரோவுடன் இணைந்து இரண்டு திரைப்படங்களில் நடித்து இருந்தார். இதனால் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளதாக பலராலும் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இருப்பினும் வெளிப்படையாக இருவருமே தங்களுடைய உறவு முறை பற்றி கூறாத நிலையில் சினிமா வட்டாரத்தில் பேசும் பொருளாக இருந்து வந்தனர். ஆகையால் பலரும் இந்த ஹீரோயின் அந்த ஹீரோவின் கண்ட்ரோலில் தான் செயல்படுகிறார் என்று கூறிவந்தனர்.

தெலுங்கில் அவர் நடித்த திரைப்படங்கள் ஹிட்டடித்த உடனே தன்னுடைய சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி விட்டார் அந்த நடிகை. துரதிஷ்டவசமாக அந்த ஹீரோ நடித்திருந்த திரைப்படங்கள் தோல்வியை தழுவ ஆரம்பித்தது. இதனால் உஷாரான அந்த நடிகை அந்த ஹீரோவை கழட்டி விட்டதாக கூறப்படுகிறது. இன்னிலையில் இருவருக்குமிடையில் பிரச்சினைகள் நிலவி வருவதாகவும் வெளிப்படையாக பேசப்பட்டு வருகிறது.

நடிகை பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் அந்த ஹீரோவை பற்றி பேச ஆரம்பித்தால் வேறு எதாவது பேசலாமா என்று அந்த டாப்பிக்கையே மாற்றி விடுகிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பிரபல நடிகர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் வரை முடிந்தபின்பு அவரை கழட்டி விட தெரிந்தவருக்கு இந்த ஹீரோவையும்

கழட்டிவிட தெரியாதா என்ன? என்று பலரும் கூறிவருகின்றனர். ஒருவேளை அந்த இளம் ஹீரோவின் எதிர்கால திரைப்படங்கள் ஹிட்டடிக்கும் ஆனால் மீண்டும் இந்த நடிகை அவருக்கு பச்சைக்கொடி காட்டுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.