புட்ட பொம்மா..! புட்ட பொம்மா..! நம்ம பாட்டுக்கு மனைவியுடன் சேர்ந்து டேவிட் வார்னர் போட்ட குத்தாட்டம்! வைரல் வீடியோ உள்ளே!

பிரபல ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மனைவியுடன் சேர்ந்து புட்ட பொம்மா..! புட்ட பொம்மா..! என்ற நம்ம பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்டக்காரர்களில் ஒருவர் டேவிட் வார்னர் ஆவார். தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கும் இவர் ஐபிஎல் அணிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தனது மனைவியுடன் ஒரு இந்திய பாடலுக்கு டிக் டாக்கில் நடனமாடி அந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் வெளிவந்த புட்ட பொம்மா..! புட்ட பொம்மா..! பாடல் இணையத்தில் மிகவும் பிரபலமாகியது. ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பெற்றிருக்கும் ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்காக தனது மனைவியுடன் இணைந்து புட்ட பொம்மா..! புட்ட பொம்மா..! என்ற பாடலுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஆடுவது போலவே குத்தாட்டம் போட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்திய பாடலுக்கு தனது மனைவியுடன் டிக் டாக்கில் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ தற்போது இரண்டு கோடி பார்வையாளர்களை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.