ஷிகர் தவானுக்கு தோளுக்கு மேல் வளர்ந்த மகளா? இருவரும் சேர்ந்து செய்த செயலை பாருங்கள்..! வீடியோ உள்ளே!

பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது மகள் அலியா தவான் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.


இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ஷிகார் தவான் ஆவார். இவர் தன்னுடைய மகள் அலியா தவான் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் கூறும் விதமாக தனது மகள் அலியாவுடன் இணைந்து நடனமாடி எடுத்த அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் தவானின் மகள் தவானுடன் இணைந்து நடனம் ஆடுகிறார். ஆடி முடிப்பதற்குள் அவர் வெட்கப்பட்டு சிரிக்கிறார். 

அதுமட்டுமில்லாமல் அந்த வீடியோ உடன் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ஹாப்பி பர்த்டே மை ஏஞ்சல் , நீ எப்போதும் பிரகாசத்துடன் இருக்க வேண்டும். நட்சத்திரத்தைப் போல மின்ன வேண்டும். நான் உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன். பாதுகாப்பாக இரு! இந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடு எனவும் அதில் அவர் பதிவு செய்திருக்கிறார்.அதற்கு அவரது மகள் அலியா இந்த வீடியோவை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. ஐ லவ் யூ அப்பா மிஸ் யூ என கூறி கமெண்ட் செய்துள்ளார்.

தற்போது நிலை வரும் ஊரடங்கால் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஷிகர் தவான் தனது வீட்டிலேயே மனைவி மற்றும் மகனுடன் நேரத்தை செலவழித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது மகளின் பிறந்தநாளுக்கு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.