கோலமாவு சந்தியாவுக்காக சவுக்கு சங்கர் மீண்டும் மீண்டும் கைது

தமிழக பெண் காவலர்களை இழிவாக பேசிய யூடியூப்பர் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முன்னேற்றப்பட நிறுவனர் வீரலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சவுக்கு சங்கர் மற்றும் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் பெலிக்ஸ் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் 294பி(ஆபாசமாக திட்டுதல்), 506 (1)( மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் சிறைக் காவலர்களால் தாக்கப்படுவதாகவும், மனித உரிமை மீறப்படுவதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்த நிலையில், சவுக்கு சங்கரின் தாயார் சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், திருச்சி காவல்துறையினர் பதிவு செய்திருந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். திருச்சியில் இருந்து கோவை மத்திய சிறைக்கு சென்ற போலீசார் திருச்சி வழக்கில் கைது செய்வதற்காக உத்திரவினை சவுக்கு சங்கரிடம் வழங்கினர்.

தமிழக பெண் காவலர்களை இழிவாக பேசிய யூடியூப்பர் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முன்னேற்றப்பட நிறுவனர் வீரலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சவுக்கு சங்கர் மற்றும் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் பெலிக்ஸ் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் 294பி(ஆபாசமாக திட்டுதல்), 506 (1)( மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூத்த பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் கொடுத்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் சவுக்கு சங்கர் மீது மற்றொரு வழக்குப் பதிவு செய்துள்ளனர். என்டிடிவி பிராஃபிட் தொலைக்காட்சியின் நியூஸ் எடிட்டர் சந்தியா ரவிசங்கர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரில், பெண் பத்திரிகையாளர் குறித்து கோலமாவு சந்தியா என்ற பெயரில் இழிவாக எழுதிய கட்டுரை மற்றும் அது தொடர்பான சிசிடிவி காட்சிகளை அவரது இணைய‌ பக்கத்தில் வெளியிட்டிருந்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

அப்புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் 294பி (ஆபாசமாக திட்டுதல்), 354 டி(பெண்ணைப் பின் தொடர்தல்), 506(1)(மிரட்டல்), 509(பெண்ணை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம்) ஆகிய பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் க்ரைம் போலீஸார், தேனி பழனி செட்டிப்பட்டி போலீஸார் ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் சென்னை சைபர் க்ரைம் போலீஸார் மேலும் 2 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இந்த இரண்டு வழக்குகளிலும் சென்னை போலீஸார் விரைவில் சவுக்கு சங்கரை கைது செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமல்லாமல் சவுக்கு சங்கரை கைது செய்த போது அவருடன் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் காரில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மீது கஞ்சா வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்ததாக இளைஞர் ஒருவரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த மகேந்திரன் என்ற இளைஞரிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து பல வழக்குகளில் சிக்குவதால் சவுக்கு குண்டர் சட்டத்தில் கைதாவது உறுதியாகிறது.