உன் யோக்கியதை எனக்கு தெரியாதா? லட்சுமி ராமகிருஷ்ணனை தெருவுக்கு இழுத்த பிக்பாஸ் வனிதா!

நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்ட பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக பிக்பாஸ் வனிதா வெளியிட்டுள்ள புதிய பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது.


நடிகை வனிதா நேற்றைய முன் தினம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் பீட்டர் பாலை மூன்றாவதாக திருமணம் செய்து இருக்கிறார். இந்நிலையில் பீட்டர் பாலிரன் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னிடமிருந்து முறையாக விவாகரத்து பெறாமலேயே நடிகை வனிதாவை தனது கணவர் திருமணம் செய்து கொண்டிருப்பதாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதிலும் இந்த புகாரானது கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வனிதாவின் மூன்றாவது திருமணம் பற்றி பரபரப்பாக அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணனும் நடிகை வனிதாவின் திருமணத்தைக் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், இப்பொழுது தான் பார்த்தேன் அந்த நபருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் விவாகரத்து கூட ஆகாமல் எப்படி அவரை திருமணம் செய்து கொள்ள முடியும். படிப்பும் அனுபவம் நிறைந்த ஒருவரால் எப்படி இந்த மாதிரி முடிவை எடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பி ட்வீட் செய்திருந்தார்.

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வெளியிட்ட இந்த பதிவை பார்த்த நடிகை வனிதா, உங்களுடைய ட்வீட்டை முதலில் நீக்குங்கள்.. உங்களுடைய வேலையை மட்டும் பாருங்கள்.. நீங்கள் ஒன்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலோ அல்லது குடும்பத்தை கெடுக்கும் உங்களுடைய நிகழ்ச்சியிலோ இல்லை. நான் நன்கு படித்தவர். சட்டரீதியான அறிவும் உடையவர். யாருடைய உதவியுமின்றி என்னால் என்னை நன்றாக பார்த்துக் கொள்ளமுடியும். யாருடைய அங்கீகாரமோ ஆதரவோ எனக்கு தேவையில்லை. எப்போதும்போல பலாத்காரம் மற்றும் தற்கொலை பற்றி பேசுவதை தொடர்ந்து செய்யுங்கள். அடுத்தவர்களின் குடும்பப் பிரச்சினைகளில் அவர்களின் விருப்பம் இன்றி விவாதிப்பதை முதலில் நிறுத்துங்கள்.

உங்களுக்கு உண்மையிலேயே என் மீது அக்கறை இருந்தால் எனக்கு போன் செய்து இதைப் பற்றி பேசி இருப்பீர்கள். இப்படிப் சமூகவலைத்தளங்களில் பேசி உங்களுக்கு தேவையான பப்ளிசிட்டியை தேடி கொள்ள மாட்டீர்கள்.. என்று நடிகை வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனின் பதிவுக்கு பதில் அளித்திருக்கிறார். தற்போது இந்த பதிவுகள் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.