ரேவதி, பரணி என்று நட்சத்திரங்களின் பெயரை மனிதருக்கு வைத்தால் என்ன பலன் கிடைக்கும்..? பிரபல ஜோதிடரின் கணிப்பு இதோ...

நட்சத்திரம் என்றால் நமக்கு வானில் ஜொலி ஜொலிப்பான பொருள் என்றே தெரியும் ஆனால் நட்சத்திரம் என்பது வான்வெளி மண்டலத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரம் உள்ளது என்பது விஞ்ஞான கண்டுபிடிப்பாகும்.


 நட்சத்திரம் எப்போதும் மின்மினிப்பு கொண்டு நம் அனைவரும் மனதை கவர்ந்து இழுப்பதால் சினிமாவில் நடிப்பவர்களை சினிமா நட்சத்திரம் என்றே நாம் கூறுகிறோம் எனில் பிறரது மனதை கவர்ந்து இழுக்க உடல் முழுவதும் மினுக்கும் அரிதாரம் பூசி நம் மனதை கவரும்படி நடித்து காட்டுவதால் . சினிமாவில் நடிப்பவர்களை நட்சத்திர போல் மனம் பாவித்து கொள்கிறது.

நட்சத்திரம் என்பது சினிமாவில் மட்டும் அல்ல. நட்சத்திர பேச்சாளர் நட்சத்திர சமூக ஆர்வலர் நட்சத்திர தொழில் அதிபர் நட்சத்திர கம்பெனி நட்சத்திர ஓட்டல் என இப்படி முதன்மையாக கூறப்படும் அனைத்து அந்தஸ்து உள்ளவைகளை எல்லாம் நட்சத்திரம் என்று ஒன்றை வைத்து உள்ளார்கள் இது போலே ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளது. இந்த 27 நட்சத்திரங்களும் ஒவ்வொன்றும் மகத்தான சக்தி பெற்றவை இந்த நட்சத்திரங்களுக்கு என்று ஒவ்வொரு கிரக ஆதிக்கம் உள்ளது. இந்த நட்சத்திர பாத வழியாக தான் கிரகஙகள் பயணப்பட்டு செல்கிறது.

ஜோதிடத்தில் கூறப்படும் நட்சத்திரத்திற்கு என்று தனித்தனி குணங்கள் உள்ளன. அதே போல் நவகிரகங்களுக்கு என்று தனித்தனி குணங்கள் உண்டு. இந்த நட்சத்திரம் கிரகம் சேர்ந்து மனிதனுக்கு குணங்கள் நல்லது கெட்டது என மாறி மாறி பல பலன்கள் செய்கிறது.

பொதுவாக நட்சத்திர பெயர்கள் மனிதர்களுக்கு வைக்கும் போது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் எனில் என்ன தான் யோகமான ஜாதகமாக இருந்தாலும் பெயர்களில் குளறுபடிகள் இருந்தால் அந்த யோக பலன்கள் அனுபவிக்க தடைகள் வரக்கூடும் அந்த தடைகள் அகல நட்சத்திர அதன் அதிபதி நிலைகளை கவனித்து பெயர் வைக்க வேண்டும் அதன்படி ...

 நட்சத்திர பெயர்கள்       

அஸ்வினி _ அதிபதி கேது- ஆண் நட்சத்திரம்- தேவ குணம்

பரணி -_ அதிபதி சுக்ரன் -ஆண் நட்சத்திரம் - மனுஷகுணம்

கிருத்திகை -_ அதிபதி சூரியன் -பெண் நட்சத்திரம்-அரக்கர் குணம்

அஸ்தம் _- அதிபதி சந்திரன் - பெண் நட்சத்திரம் - தேவ குணம்  

சுவாதி -_ அதிபதி- ராகு - ஆண் நட்சத்திரம் - தேவ குணம்

ரேவதி -_ அதிபதி - புதன். பெண் நட்சத்திரம் - தேவ குணம்

இவை நம் தமிழ்நாட்டில் பரவலாக பலர்க்கும் வைக்க கூடிய பெயர்கள் தான் ஆனால் வடநாட்டில் கேரளத்தில் நட்சத்திர மறு பெயர்கள் வைப்பார்கள் என்றாலும் இதன் விபரம் பற்றி பார்ப்போம்

அஸ்வினி முதல் நட்சத்திரம் அதுவும் ஆண் நட்சத்திரம் என்றாலும் பெரும்பாலும் பெண்களுக்கே இப்பெயர் வைப்பார்கள். அஸ்வினி பெயர் கொண்டவர்கள் அதன் அதிபதி கேது நல்ல நிலையில் இருந்தால் தான் அவர்களது வாழ்வு சிறப்பாக இருக்கும் மேலும் ஆண் நட்சத்திரம் என்பதால் ஆணுக்கு நிகரான குணம் உயரம் கம்பீரமாக இருப்பார்கள். தேவ குணம் என்பதால் நல்லது கெட்டது ஆராய்ந்து பார்க்கும் குணம் இருக்கும்

பரணி தரணி ஆளும் என்பார்கள்.இந்த பெயர் பெரும்பாலும் ஆண்களுக்கு வைப்பார்கள் இதன் அதிபதி சுக்ரன் என்பதால் சுக்ரன் நல்ல ஸ்தானங்களில் பலம் பெற்று இருந்தால் மட்டுமே தரணி இல்லையேல் வாழ்வு சும்மார் தான். ஆண் நட்சத்திரம் என்பதாலும் மனுஷ குணம் என்பதாலும் சராசரி எல்லா சுக துக்க வாழ்வு அடைவார்கள்

கிருத்திகை இவை முருகபெருமான் நட்சத்திரம் என்பது சிறப்பு இவை ஆண் - பெண் என அனைவரும் வைத்து கொள்ளும் பெயர். பெண்கள் கிருத்திகா எனவும் ஆண்கள் கார்த்தி என வைத்து கொள்வது உண்டு.இதன் சூரியன் என்பதால் மதிப்பு மிக்க இடத்தில் இருப்பார்கள். பெண் நட்சத்திரம் அசுர குணம் இருப்பதால் வேகம் விவேகம் இருக்கும் பெண் நட்சத்திரம் என்பதால் ஆண்களுக்கு வைத்தால் வாழ்வில் தடைகள் கஷ்டங்கள் வேதனைகள் வருவது இயல்பு

அஸ்தம் என்பது கை என பொருள்படும். பெரும்பாலும் இந்த நட்சத்திர பெயர் கேரளாவில் அதிகம் வைப்பார்கள். சந்திரன் அதிபதி பெண் நட்சத்திரம் தேவ கணம் என்பதால் வாழ்வில் தன் கையை நம்பியே வாழ வேண்டும் சுய முயற்சியால் மட்டுமே உயர்வு உண்டு.

சுவாதி இந்த பெயர் பெண்களுக்கு மட்டுமே வைக்கப்படுகிறது. இதன் அதிபதி ராகு ஆண் நட்சத்திரம் தேவ குணம். இந்த பெயர் உள்ளவர்கள் ராகு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே வாழ்வு நன்றாக இருக்கும் இல்லையேல் வாழ்வு நரகம் தான் ஒரு ஆண் போல் மனமே வெறுப்பு அடைய செய்யும். கொஞ்சம் அகங்காரம் இருக்கும். இதனால் பிறர் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. இவர்கள் மிகுந்த மன உளைச்சல் அடைந்தால் தற்கொலை போன்ற எண்ணம் அதிகம் இருக்கும்.

ரேவதி கடைசி 27வது நட்சத்திரம் அதிபதி புதன் பெண் தேவ குணம் கொண்டு இருப்பதால் இந்த பெயர் பெரும்பாலும் பெண்களுக்கு வைக்கபடுகிறது.இந்த பெயர் கொண்டவர்கள் எப்போதும் கலகலப்பாகவே இருக்கிறார்கள் எதற்குமே கவலை இன்றி நடப்பது நடக்கட்டும் டேக் கிட் ஈஸி என இருப்பதால் மகிழ்ச்சி நிறைந்தவர் என்றே சொல்லப்படுகிறது.

நட்சத்திர பெயர்கள் மனிதர்களுக்கு வைக்கும் போது ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் சக்திக்கு ஏற்றவாறு அதற்கு பொருத்தமான பெயர்கள் வைத்தால் தான் வாழ்வு இனிதாக மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.

கணித்தவர்

ஜோதிட பிரம்மம் : சூரியநாராயணமூர்த்தி

ஈரோடு _- 638 001

செல் .. 9443923665 & 9865065849