தி.மு.க.விலும் காங்கிரஸில் மொத்த பேரும் ஜாமீன்லதான் இருக்காங்களா..?

நாட்டை நாங்கள்தான் காப்பாற்றப் போகிறோம், எங்களுக்கே ஓட்டு போடுங்கள் என்று பேசிவரும் தி.மு.க.விலும், காங்கிரஸ் கட்சியிலும் எத்தனை பேர் ஜாமீனில் இருக்கிறார்கள் என்ற தகவல் வந்துள்ளது.


சோனியா ஜாமீன்ல இருக்காங்க, ராகுல் ஜாமீன்ல இருக்கார், ராபர்ட் வதேரா ஜாமீன்ல இருக்கார். ப.சிதம்பரம், நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எல்லாரும் ஜாமீன்லதான் இருக்காங்க -

தி.மு.க.வில் கனிமொழி, அ.ராசா, தயாளு மேல இருக்கற 2ஜி கேஸ் மறுபடியும் விசாரணை ஆரம்பமாயிடிச்சி. மாறன் சகோதர்கள் எந்த நிமிஷம் வேணும்னாலும் கைதாக வாய்ப்பு. அதாவது ஒட்டுமொத்த கருணாநிதி குடும்பமே இப்ப ஜாமீன்ல தான் வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கு. 

தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் முக்கால்வாசிப்பேர் சொத்துக் குவிப்பு வழக்குகளில் ஜாமீனில் திரிபவர்கள்தான். போதக்குறைக்கு தி.மு.க முன்னால் அமைச்சர் கோ.சி.மணியின் மகனுக்கு சென்ற வாரம் தான் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது -

தற்பொழுது ஜெகத்ரட்சகன் இலங்கையில் 28,000 கோடி முதலீடு செய்துள்ள தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட கட்சிகளுக்குத்தான் ஓட்டு போட வேண்டுமாம்... நல்லா இருக்குதே ஞாயம்..?