சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து… கதறும் வழக்கறிஞர்.

சிறையில் இருக்கும் சவுக்கு சங்கருக்கு போதிய பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால் அவரது உயிருக்கு ஆபத்து என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தை நாடியிருப்பது பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.


சிறையில் இருக்கும் சவுக்கு சங்கருக்கு போதிய பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால் அவரது உயிருக்கு ஆபத்து என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தை நாடியிருப்பது பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

கோவை சிறையில் சவுக்கு சங்கரை சந்தித்து திரும்பிய வழக்கறிஞர், ‘’ சவுக்கு சங்கரை கடந்த சனிக்கிழமை அடித்து துன்புறுத்தியிருக்கிறார்கள். ஆனால், இன்னமும் எக்ஸ் ரே எடுக்கவில்லை. கை, கால்களில் அடிபட்டிருப்பதால் ரொம்பவும் சிரமப்பட்டு நடக்கிறார். கை உடைந்து போயிருக்கிறது. கொப்பளம் இருக்கிறது.

இதற்காக சிறை மாற்றம் செய்வதற்கு கேட்பீர்களா என்ற கேள்வி எழுப்புகையில், ‘தமிழகம் முழுக்க எங்கு சென்றாலும் அதிகாரிகள் தமிழக அரசு என்ன சொல்கிறதோ அதையே கேட்பார்கள். எனவே, சி.பி.ஐ. என்கொயரி கேட்பதற்கு இருக்கிறோம். அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவைக்கு வரும்போது ஏற்பட்ட விபத்து குறித்து கேட்கையில், அது திட்டமிட்ட விபத்து அல்ல என்று சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார். பிரேக் அடிக்கும் போது உதட்டில் மட்டுமே சிறிய காயம் ஏற்பட்டது. மேலும் உடன் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் இருந்தார்கள் என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

நடவடிக்கை இருக்கட்டும்.