கோவை சிறையில் கொல்லப்படுவாரா சவுக்கு சங்கர்..?

கோவை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார். கோவை சிறையில் என் உயிருக்கு ஆபத்து. கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன் என்று இன்று சவுக்கு சங்கர் கூச்சல் போட்டார்.

கோவை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார். கோவை சிறையில் என் உயிருக்கு ஆபத்து. கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன் என்று இன்று சவுக்கு சங்கர் கூச்சல் போட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜராக வந்த சவுக்கு சங்கர், ‘கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன். செந்தில் குமார் தான் என் கையை உடைத்தார். என்னை உயிரோடு விடமாட்டேன் என்கிறார்’ என்றெல்லாம் உரத்த குரலில் சவுக்கு சங்கர் மீடியாக்களிடம் பேசினார்.

இப்படி குரல் எழுப்பிய சங்கர் அருகிலிருந்த சிறைக் காவலரிடம் சிரித்தபடி பேசிக்கொண்டு சென்றதைப் பார்த்த அத்தனை பேரும் குழம்பியே போனார்கள். சவுக்கு சங்கர் உண்மையைப் பேசுகிறாரா அல்லது வேண்டுமென்றே கத்துகிறாரா என்று அவரது வழக்கறிஞர் தான் விவரிக்க வேண்டும்.