எம்.ஜி.ஆர். பாணியில் சைதை துரைசாமி கோபம்

சினிமா நடிகராக, அரசியல் தலைவராக கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்க்கையில் மக்களோடு மக்களாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்ந்திருக்கிறார். எந்த ஒரு தருணத்திலும் பொதுவெளியில் எம்.ஜி.ஆர். அவரது கோபத்தை, ஆவேசத்தைக் காட்டியதே இல்லை. தவறு செய்த அதிகாரிகள், அரசியல்வாதிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என யாராக இருந்தாலும் தனியே சந்தித்தே கண்டிப்பும் தண்டிப்பும் வழங்குவார்.

- என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 11

இரண்டாவது நாளாக சைதை துரைசாமி மாநகராட்சிக்கு வந்ததைக் கண்ட அதிகாரிகளும் உதவியாளர்களும் ஆச்சர்யமானார்கள். அவர் அலுவலகத்திற்கு வந்தது மட்டுமின்றி, ’பொதுமக்களிடம் வாங்கிய புகார் மனுக்களை பதிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்துவிட்டீர்களா?’ என்று கேள்வி கேட்டதும் மிரட்சி அடைந்துவிட்டார்கள்.

அவர்கள் எந்த பதிலும் சொல்லாமல் விழிப்பதைக் கண்டதும் சைதை துரைசாமி அதிர்ச்சி அடைந்துவிட்டார். அதேநேரம் அவர்களுடைய அலட்சியத்தைக் கண்டு கோபமோ, ஆவேசமோ அடையவில்லை. ஏனென்றால், அவரது அரசியல் வளர்ப்பு அப்படிப்பட்டது.

சினிமா நடிகராக, அரசியல் தலைவராக கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்க்கையில் மக்களோடு மக்களாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்ந்திருக்கிறார். எந்த ஒரு தருணத்திலும் பொதுவெளியில் எம்.ஜி.ஆர். அவரது கோபத்தை, ஆவேசத்தைக் காட்டியதே இல்லை. தவறு செய்த அதிகாரிகள், அரசியல்வாதிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என யாராக இருந்தாலும் தனியே சந்தித்தே கண்டிப்பும் தண்டிப்பும் வழங்குவார்.

எனவே, புரட்சித்தலைவர் வழியில் புன்னகை புரிந்த சைதை துரைசாமி, ‘’சரி, நாம் இன்றே அவற்றை பதிவு செய்யத் தொடங்குவோம். அவற்றை பதிவு செய்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்புவோம்’ என்றதும் உடனடியாக மனுக்கள் பதிவு செய்யும் பணி தொடங்கப்பட்டது.

அந்த மனுக்கள் பதிவு செய்யப்பட்டதும், ‘தங்களுடைய புகார் மனு பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று புகார் கடிதங்களுக்கு பதில் அனுப்பும் நடைமுறையும் தொடங்கப்பட்டது.

பொதுவாக மாநகராட்சிக்கு புகார் அனுப்பியவர்கள், அந்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, அதிகாரிகள் கைக்குக் கிடைத்ததா இல்லையா என்றெல்லாம் குழப்பத்தில் இருப்பார்கள். இந்த சூழலில் தங்கள் புகார் மனு பதிவு செய்யப்பட்டதாக தகவல் கிடைத்ததும் ஆச்சர்யமானார்கள்.

அதே நேரம், மனு வாங்குவதில் சைதை துரைசாமி ஒரு புதுமையான வழி முறையைக் கையாண்டார். அந்த வித்தியாசமான வழிமுறை என்ன?

- நாளை பார்க்கலாம்.