தவறான பாதையில் சென்ற மனைவி..! 3 முறை தற்கொலை சிந்தனை..! கிரிக்கெட் வீரர் ஷமி வெளியிட்ட பகீர்!

தற்கொலை செய்து கொள்வதற்கு இதுவரை 3 முறை முயற்சி செய்துள்ளதாக பிரபல கிரிக்கெட் வீரர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுள் ஒருவர் முகமது ஷமி. 2015-ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அதன் பின்னர் அவருடைய வாழ்க்கை தடம் புரள தொடங்கியது. உலகக்கோப்பை போட்டிக்கு பின்னர் அவருக்கு காயம் ஏற்பட்டதால் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

காயம் சரியாவதற்கு கிட்டத்தட்ட 1.5 ஆண்டுகளாகின. 2018-ஆம் ஆண்டில் அவருக்கு மேலும் சோதனைகள் ஏற்பட்டன. அதாவது அவருடைய மனைவி ஹாசின் ஜகான், முகமது ஷமி மீது பல்வேறு வன்கொடுமை புகார்கள் காவல்நிலையத்தில் அளித்தார். காவல்துறை விசாரணை மற்றும் ஊடகங்களில் முகமது ஷமி பெயர் அடிக்கடி அடிபட்டன.

அதன் பின்னர் 2018-ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரின் முன்னர் அவருக்கு கார் விபத்து ஏற்பட்டது. அப்போதும் அவரால் இந்திய அணியில் இடம் பெற இயலவில்லை. இதனால் அப்போது அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக சக வீரர் ரோஹித் சர்மாவிடம் கூறியுள்ளார்.

அதாவது, "இதுவரை 3 முறை நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தேன். ஆனால் அப்போதெல்லாம் என்னுடைய குடும்பத்தினர் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தனர். அவர்களுடைய உதவி இல்லை என்றால் நான் எப்போதோ கிரிக்கெட் வாழ்க்கையை விட முடிவெடுத்து இருப்பேன். என்னுடைய வீடு 24-வது மாடியில் இருப்பதால் எங்கேயாவது நான் கீழே குதித்து விடுவேன் என்ற அச்சத்தில் என்னை மிகவும் கவனித்து வந்தனர்" என்று மிகுந்த மன வேதனையுடன் கூறியுள்ளார்.

அதன்பின் தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததை அடுத்து மன நிம்மதி அடைந்தார். மேலும் காயங்களில் இருந்தும் மீண்டு வந்து 2019ஆம் ஆண்டு உலக கோப்பை முதல் இந்த ஆண்டு தொடக்கம் வரை மிகவும் சிறப்பாக பந்துவீசி வந்துள்ளார்.

தான் மூன்று முறை தற்கொலை செய்துகொள்ள எண்ணியதாக ரோஹித் சர்மாவிடம் முகமது ஷமி கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.