பாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனைக்குப் போனது தான் எமனாகிப் போனதா..?

கொரோனா தொற்று ஏற்பட்ட நேரத்தில், மிகவும் நம்பிக்கையுடனும் ஆரோக்கியத்துடனும் ஒரு பதிவு போட்டிருந்தார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அத்தனை நம்பிக்கையுடன் இருந்தவர் மரணத்துக்குக் காரணம், அவருக்குக் கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைதான் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.


இதுகுறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனின் பதிவு இது. பல திசைகளில் இருந்தும் இந்த எண்ணம் தான் வெளிப்படுகிறது. முதலில் எங்க வீட்டுக் கீழிருக்கும் சகோதரி வாயில் வெளிப்பட்டது!

’’எஸ்.பி.பி ஆஸ்பிட்டலுக்கே போயிருக்கக் கூடாது…ஏன் தான் போனாரோ…சின்ன தொற்றுன்னு தான் அவரே காணொலியில் பேசியிருந்தார்.வீட்டிலே மட்டும் இருந்திருந்தால் கண்டிப்பாக பொழைச்சிருப்பார்…’’ இது அவர் என் மனைவியிடம் பேசியது.

மாலை டீக்கடை பென்சிலும் 30 வயது மதிக்கத்தக்க இளைஞன் தன் நண்பனிடம் பேசிக் கொண்டிருந்தான்,’’அவருகாண்டி ஆஸ்பிட்டலுக்கு போகலன்னு வச்சிக்க மச்சி…,இந்த சாவே வந்திருக்காது…’’ என்றான்!

’’நானும் அததான் நெனைச்சேன்…இவனுங்க பணத்துக்கோசரம் ஆஸ்பீட்டல்ல வச்சு இல்லாத டிரீட்மெண்டெல்லாம் தந்து ஒழிச்சிட்டானுங்க…’’ என்றான் மற்றொரு இளைஞன்!

இதே கருத்தையே ஆங்கில பத்திரிக்கையொன்றில் பணிபுரியும் நண்பர் போனில் பேசும் போது,’’ஐ திங்க் ஹி சுட் அவாய்ட் ஹாஸ்பிட்டல்.., தெட் இஸ் எ பிராப்ளம்…!தே காம்பிளிகேட்டட் ஹிஸ் ஹெல்த்…’’ என்றார்!

இவையெல்லாம் இன்று பிரைவேட் மருத்துவமனை குறித்த பொதுபுத்தியில் ஆழப் பதிந்துவிட்ட அபிப்ராயத்தில் அல்லது அனுபவத்தில் வெளிப்பட்ட வார்த்தைகள் தான்! ஆனால்,உண்மை என்னவென்று நமக்குத் தெரியாது! எஸ்.பி.பியின் குடும்பம் என்றாவது சொன்னால் தான் உண்டு!

உண்மையில் எனக்கும் இந்த எண்ணம் தான்! ஏனென்றால்,அவரே மருத்துவமனை சேர்ந்த போது சொன்னார்;இது ரொம்ப சின்ன தொற்று தான் மூன்று, நான்கு நாட்களில் சரியாகிவிடுவேன்.

ஆக,அவருடைய உண்மையான அனுபவத்தில் அவர் ஆரோக்கியமாகவே உணர்ந்துள்ளார்.அவர் மருத்துவர்களிடம் யோசனை பெற்று வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி இருந்தால், விரைவில் பூரணகுணம் அடைந்திருக்க வாய்ப்புண்டு…என்றே தோன்றுகிறது.மனதை ஆற்றமட்டாமல் தான் எழுதுகிறேன் என்று கூறியுள்ளார்.