என் மகனை வைத்துக் கொண்டே பீட்டருடன் வனிதா செய்த செயல்..! முதல் மனைவி எலிசபெத் கூறிய அதிர்ச்சி தகவல்கள்!

பிரபல நடிகையொருவர் திருமணம் செய்துகொண்ட 3-வது கணவருக்கு எதிராக அவருடைய முதல் மனைவி அளித்துள்ள பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


பிரபல குணச்சித்திர நடிகரான நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவர் 90-களில் நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தார். குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவர்களை பிரிந்து வாழ்ந்து வந்தார். சென்ற ஆண்டு "உலக நாயகன்" கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய "பிக் பாஸ்"  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன் பிறகு தனியார் தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இவர் 3-வது திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. அதாவது முதலில் நடன இயக்குனர் ஒருவருடன் இவர் காதல் ஈடுபட்டதாக வதந்திகள் பரவின. ஆனால் அவற்றை வனிதா மறுத்தார். தற்போது அவர் பீட்டர் பால் என்ற இளைஞரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். 

அதாவது, "அனைவருக்கும் இன்னொரு வாய்ப்பு கிட்டுவது அரிது. நான் தற்போது ஒரு புதிய உறவின் தொடக்கத்தில் உள்ளேன். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். பீட்டர் பால் என்னுடைய கனவிலிருந்து நேரடியாக வந்தவர். என்னிடம் இல்லாத ஒரு வெற்றிடத்தை வெளிக்கொண்டு வந்தபிறகு அதனை நிரப்பியவர். அவருடன் இருக்கும்போது நான் பாதுகாப்பாக கருதுகிறேன். நண்பராக என்னுடைய வாழ்வில் நுழைந்து சுகதுக்கங்கள் அனைத்திலும் கலந்து கொண்டு தற்போது காதலராக மாறியுள்ளார்" என்று பதிவிட்டிருந்தார்.

இவருடைய முடிவிற்கு இவரின் இரண்டு மகள்களும் சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கிறித்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன. இந்நிலையில், இது திருமணத்திற்கு எதிராக பீட்டர் பாலின் முதல் மனைவியான ஹெலன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதாவது முதல் மனைவியை சரியாக விவாகரத்து செய்யாமல், எவ்வாறு அடுத்து திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற  குற்றச்சாட்டை ஹெலன் காவல்நிலையத்தில் பதிவு செய்துள்ளார். 

இதுகுறித்து ஹெலன் கூறுகையில், "என்னுடைய கணவருக்கு சரியான வருமானம் இல்லை. மேலும் அவர் பணியாற்றும் இடங்களில் அனைத்து விதமான கெட்ட பழக்கங்களும் உண்டு. இதனால்தான் நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்தோம். இதனிடையே அவருடைய திருமண செய்தியை கேட்டு நான் அதிர்ந்து காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தேன். அப்போது காவல்துறையினர் 

"வனிதாவை பற்றி உங்களுக்கு தெரியாதா... எப்படி இருந்தாலும் இன்னும் 1 ஆண்டுக்கு உங்கள் கணவரை விட்டு பிரிந்து விடுவார் என்று கூறியுள்ளனர்.

எப்படி என்னை விவாகரத்து செய்யாமல் வேறொரு பெண்ணை அவரால் திருமணம் செய்து கொள்ள முடிந்தது. அனைவரும் சேர்ந்து என்னை நன்றாக ஏமாற்றிவிட்டனர். நான் ஒரு கோடி கேட்டதாக அவர்கள் என்மீது குற்றம் சுமத்தியுள்ளனர். உண்மையாக இருப்பின் ஏன் இதுவரை எந்த காவல் நிலையத்திலும் என் மீது புகார் அளிக்கவில்லை. அனைத்து தவறுகளையும் செய்துவிட்டு இறுதியாக பழியை எங்கள் மீது போடுகின்றனர்" என்று பேட்டி அளித்துள்ளார்.

இந்த பேட்டியானது சமூக வலைத்தளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.