பெயரில் ஸ்ரீ எழுத்தை வைத்தால் என்னாகும் தெரியுமா? பிரபல ஜோதிடரின் கணிப்பு இதோ.

சமீப காலமாக ஸ்ரீ என்கிற எழுத்து கொண்ட பெயர் வைத்தவர்கள் சோதனை காலமாக உள்ளது. ஜெயஸ்ரீ என்ற பெண் பெட்ரோலில் கொளுத்தப்பட்டால் சுபஸ்ரீ என்கிற பெண் பேனர் விழுந்து துர்மரணம் அடைந்தால்.


நடிகை ஸ்ரீதேவி திடீர் என்று மரணம் அடைந்தார்- இப்படி ஸ்ரீ என்கிற எழுத்து கொண்டவர்கள் வாழ்வு என்பதைவிட அவர்களது சாவு எல்லோரையும் சங்கடத்தை தந்து உள்ளது. ஸ்ரீ என்கிற எழுத்து பற்றி ஜோதிட ரீதியாக என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

ஸ்ரீ என்கிற சுத்தமான தமிழ் சொல், அல்ல. இவை ஒரு சமஸ்கிருத சொல்லாகும். தெய்வங்களின் பெயரை குறிப்பிடும் முன்பு அருள்மிகு என்று தமிழில் எழுதுவோம் அது போல சமஸ்கிருத மொழியில் ஸ்ரீ என்று எழுத்துவார்கள் அதாவது ஸ்ரீமன் நாராயணன் ஸ்ரீவாரி ஸ்ரீதேவி ஸ்ரீரங்கம் ஸ்ரீராமர் ஸ்ரீஆஞ்சிநேயர் இவ்வாறு பெருமாள் சாமியை குறிப்பிடும் இடங்களில் ஸ்ரீ என்கிற எழுத்தை போடுவார்கள். அதுபோல்ஸ்ரீ சிவன் ஸ்ரீ பார்வதி ஸ்ரீ முருகன் என்று எழுத மாட்டார்கள் எனில் ஸ்ரீ என்கிற எழுத்து வடக்கு தெய்வங்களுக்கு பொருந்தி வரும் வடமொழி குறிப்பிடும், சொல்லாகும்.

ஸ்ரீ சக்கரம் என்கிற தெய்வீக வழிபாடுகளில் ஒன்று உள்ளது. இந்த ஸ்ரீ சக்கரம் மகாலட்சுமி அம்சம் எனவும் ஒன்பது முக்கோண வடிவம் கொண்டது. இதன் மைய புள்ளி பிந்து எனப்படுகிறது. அதாவது ஒரு தாமரை பூ நன்கு விரிந்த நிலையில் உள்ளது போல் தோற்றம் தரக்கூடியதாகும் இந்த சக்கரம் மனித உடலுக்கும் உலகத்திற்கும் தொடர்பு உடையவை நமது உடலில் நவத்துவாரம் இருப்பது போல் இச் சக்கரத்தில் நவத்துவார வழிகள் உண்டு. மேலும் ஸ்ரீ என்கிற சொல் செல்வம் என்பதை குறிக்கும்

ஸ்ரீ என்கிற சொல் முழுக்க முழுக்க திருமால் மகாலட்சுமி ஆகிய தெய்வங்களை குறிக்கும் ஜோதிடத்தில் திருமால் தெய்வத்திற்கு புதன் கிரகமே.காரகன் மகாலட்சுமிக்கு சுக்ரன் கிரகமே காரகனாக உள்ளார். ஒருவரது ஜாதகத்தில் புதன் சுக்ரன் இணைந்து ஒரே ராசியில் நல்ல பலத்துடன் இருந்தால் இந்த ஸ்ரீ என்னும் எழுத்தை பெயரில் வைத்துக் கொள்ளலாம் மேலும் புதன் சுக்ரன் இணைந்து லக்ன பாவத்தில் நின்றாலும் அல்லது 9-ம் பாவத்தில் நின்றாலும் திருமால் மகாலட்சுமி அருள் பெற்றவர்கள்.

இவர்கள் தங்களது வாழ் நாள் முழுவதும் காசு பணத்திற்கு குறைவு இல்லாமல் சகல சௌபாக்கியத்தை அடைவர்கள் இவர்கள் தங்களது பெயர் முன்பு ஸ்ரீ என்கிற எழுத்தை போட்டுக் கொள்ளலாம் மற்றவர்கள் புதன் சுக்ரன் இணைந்து இவர்களோடு சூரியன் அல்லது சனி அல்லது ராகு சேர்ந்து இருந்தால் தங்களது பெயர்க்கு பின் ஸ்ரீ என்பதை வைத்து கொள்ளலாம்

திருமால் மகாலட்சுமி ஆகிய தெய்வத்திற்குரிய கிரகங்களாக இருக்கும் புதன் - சுக்ரன் இவர்களோடு சந்திரன் செவ்வாய் குரு கேது ஆகிய கிரகங்களுடன் சேர்ந்து இருந்தால் ஸ்ரீ என்கிற எழுத்தை தவிர்த்து விடுங்கள். எனில் புதன் - சுக்ரன் ஆகிய கிரங்களுக்கு ஆகாத கிரகமாக உள்ளது. அவ்வாறு ஸ்ரீ என்கிற எழுத்தை வைத்தால் ஜாதகர்க்கு யோகம் கைக்கு வரும் வாய்க்கு வராது.

எதிலும் முழுமையான யோக பலனை அனுபவிக்க முடியாமல் போகும். தடைகள் தாமதம் மனக்கஷ்டம் கடன் தொல்லை பணக்கஷ்டம் தொடர்கதையாக இருக்கும். மேலும் புதன் சுக்ரன் இணைந்து 6,8,12 ஆகிய பாவத்தில் நின்று இருந்தால் ஸ்ரீ என்கிற எழுத்தை தவிர்த்துவிடவும் இல்லையேல் மரணபயம் அல்லது துர்மரணம் திடீர் என்று செல்வம் இழப்பு உடல் ஆரோக்கியம் பொலிவு கெடுதல் என இருக்கும்.

புதன் சுக்ரன் லக்னத்திற்கு பாதகம் செய்யும் கிரகமாக இருந்தாலும் ஸ்ரீ என்கிற எழுத்தை விட்டு விட வேண்டும் மேலும் புதன் சுக்ரன் ஒன்று சேர்ந்து இல்லாவிட்டாலும் சரி ஸ்ரீ எழுத்தை விட்டு விட வேண்டும் பெரும்பாலும் சாமியார்கள் துறவிகள் மடாதிபதிகள் ஸ்ரீ என்றும் ஸ்ரீலஸ்ரீலஸ்ரீ இப்படியெல்லாம் வைத்துக் கொண்டு சகல சௌபாக்கியத்தையும் அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள் என்றால் அவர்களது ஜாதகத்தில் புதன் சுக்ரன் நல்ல அம்சமான நிலையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்

கணித்தவர்

ஜோதிட பிரம்மம் : சூரியநாராயணமூர்த்தி

ஈரோடு _ 638001

செல் : 9443923665 & 98650 65849