யுவராஜ்சிங் கண்களை திறந்து கொண்டு செய்த சேலஞ்ச்! கண்களை மூடிக்கொண்டு அசால்டாக செய்து முடித்த சச்சின்! வைரல் வீடியோ உள்ளே!

பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்த சேலஞ்சை மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கண்களை மூடிக்கொண்டு ஆச்சரியப்படும் வகையில் செய்து அசத்தியுள்ளார்.


தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது வீட்டிலேயே தங்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர். அந்த வகையில் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் சேலஞ்ச்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியீட்டு மற்ற கிரிக்கெட் வீரர்களான சச்சின், ரோஹித் ஷர்மா மற்றும் ஹர்பஜன் சிங் போன்றவர்களுக்கு அவர் சேலஞ்ச் விடுத்து இருந்தார்.

அந்த வீடியோவில் யுவராஜ் சிங் பேட்டை சைட் பக்கமாக திருப்பிக் கொண்டு பந்தை தொடர்ந்து கீழே விழாமல் அடித்துக் கொண்டிருந்தார். இந்த சேலஞ்சை அவர் சச்சின் ,ரோகித் ஷர்மா மற்றும் ஹர்பஜன் சிங் போன்றவர்களுக்கு கொடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது சச்சின் டெண்டுல்கர் யுவராஜ் சிங்கின் சேலஞ்சை ஏற்று அந்த சேலஞ்சை அவர் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் யுவராஜ் சிங் கண்ணை திறந்து கொண்டு செய்த அந்த சேலஞ்சை மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தனது கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு அந்தச் சேலஞ்ச்ஜை செய்து முடித்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் கண்களை மூடிக்கொண்டு செய்து காட்டியதை யுவராஜுக்கு சச்சின் சேலஞ்ச் ஆக கொடுத்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் கிரிக்கெட்டில் சச்சினுக்கு நிகர் வேறு யாருமில்லை என்று பல்வேறு தரப்பினரும் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது