குண்டர் சட்டத்தில் கைதான சவுக்கு சங்கருக்கு சிறை மாற்றம் இல்லை..?

சிறை நிர்வாகம் சார்பில் கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஆட்கொணர்வு மனுவில் வேறு சிறைக்கு மாற்ற நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்க முடியாது. சிறை மாற்றம் செய்ய சிறை நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.


சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் வட்டாரத்திலும் பத்திரிகையாளர்களும் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். அதேநேரம், இதுகுறித்து பேசிய தி.மு.க. சட்டத்துறை அமைச்சர், ‘கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு உரிய சாட்சிகள் இருக்கின்றன. அவர் மீது பொய் வழக்கு போடவேண்டிய அவசியம் இல்லை’ என தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், யூ-டியூபர் சவுக்கு சங்கர், தேனியில் கைது செய்யப்பட்டார். கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது வலது கை வேண்டுமென்றே உடைக்கப்பட்டுள்ளதாகவும், சிறையில் அவரை சிறைத் துறையினர் துன்புறுத்தியுள்ளதால், அதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

காயமடைந்த சவுக்கு சங்கருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அடங்கிய அமர்வு, சிறையில் ஆய்வு செய்த கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் , சிறையில் சவுக்கு சங்கர் கொடுமை படுத்தப்படவில்லை. சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது ஏன்? என பதிலளித்த அவர், அவருக்கு ஏற்கனவே சிறை கைதிகளுடன் பகை இருந்திருக்கலாம் எனவும், அதனால் தாக்கப்பட்டிருந்தால் அதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது எனவும் தெரிவித்தார்.

சிறை நிர்வாகம் சார்பில் கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஆட்கொணர்வு மனுவில் வேறு சிறைக்கு மாற்ற நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்க முடியாது. சிறை மாற்றம் செய்ய சிறை நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், சவுக்கு சங்கர் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறித்தி உள்ளனர். அதனால், மருத்துவர்கள் அறிக்கை படி சிறை அதிகாரிகள் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சவுக்கு சங்கருக்கு சிறை நிர்வாகம் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கோவை சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற சவுக்கு சங்கரின் தாயார் அளித்த மனு மீது சிறைத்துறை தலைவர் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.