விஜய் - சங்கவி..! அஜித் - ஹீரா..! அந்தக்கால கோடம்பாக்கம் கிசுகிசு..! உண்மை என்ன?

கோலிவுட் திரையுலக பிரபலங்கள் யாரெல்லாம் காதலித்து முறித்து கொண்டனர், யாரெல்லாம் காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன என்பதைப்பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.


அந்த காலத்திலிருந்தே நடிகர் நடிகைகள் மீது கிசுகிசுக்கள் எழுதப்பட்டு வருவது மிகவும் இயல்பாக மாறிவிட்டது. அதுவும் திரையுலகினருக்குள்ளேயே கிசுகிசு சர்ச்சைகள் ஏற்பட்டால் அது அவர்களுடைய வாழ்க்கையையே பாதிக்கும் வகையில் அமைந்துவிடும். இந்த கிசுகிசுக்களினால் பலருக்கும் மிகப்பெரிய அவமானங்கள் ஏற்பட்டுள்ளன.

அந்த வகையில் கிசுகிசுக்கள் உண்மையாகி, காதலிக்க தொடங்கி பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்த நடிகர் நடிகைகளை பற்றி பார்ப்போம்.

சிம்பு: ஒரு காலகட்டத்தில் கிசுகிசு என்றாலே அது சிம்பு தான் என்ற நிலைமை இருந்தது. அந்த அளவிற்கு அவர் நடித்த திரைப்படங்களின் கதாநாயகிகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் நயன்தாராவை அவருடைய சம்மதத்துடன் காதலித்து வந்தார். ஆனால் அந்தக் காதல் கருத்து வேறுபாடு காரணமாக முடிந்தது. அதன்பின்னர் ஹன்சிகாவை காதலித்தார் அதுவும் ஃபெயிலியரில் முடிந்தது.

நயன்தாரா: 5-10 பிறகு முன்னர் அதிக கதாநாயகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட கதாநாயகியாக தமிழ் திரையுலகில் வலம் வந்தவர் நயன்தாரா. சிம்பு, பிரபுதேவா என்று முன்னணி நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டு, பின்னர் அது காதலாக மாறி அதன்பின் அந்த காதல் முறிந்து போனது அனைவருக்கும் தெரிந்ததே.

விஷால்: இவர் கதாநாயகனாக வளர்ந்தபின் பல்வேறு சர்ச்சைகள் வந்தன. குறிப்பாக ஒரு கல்லூரி நடிகையை சினிமாவை விட்டு வெளியேற்றுவதற்கு இவர்தான் காரணம் என்றெல்லாம் பேசப்பட்டு வந்தது. பின்னால் தன்னுடைய எதிரியின் மகள் என்றும் பாராமல் வரலட்சுமி சரத்குமார் காதலித்து வந்தார். இருவருக்கும் உடன்பாடு ஏற்பட்ட திருமணம் அளவிற்கு சென்ற நிலையில், இருவரும் பிரிந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுபோன்று மேலும் சில ஜோடிகள் கிசுகிசுக்களை உண்மையாக்கி பின்னர் மனம் நொந்து காதலை முறித்து கொண்டனர். 

சில ஜோடிகள் கடைசிவரை தமிழ் திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டனர். இந்த காதலும் ஏற்படவில்லை. 

த்ரிஷா - ராணா, அனிருத் - ஆண்ட்ரியா, ரஜினிகாந்த் - லதா, கமல் - சிம்ரன், விஜய் - சங்கவி. மேற்கூறப்பட்ட ஜோடிகள் தமிழ் சினிமாவில் கிசுகிசுக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்குள் எந்தவித காதலும் ஏற்படவில்லை.