காவிரி நீரையும் கொள்ளையடிக்கிறார் விஜயபாஸ்கர்… அமைச்சர் ரகுபதி எச்சரிக்கை

புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை தடுத்து விஜயபாஸ்கர் அவரது கல்லூரிக்கும் அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். இனியும் இதை அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் ரகுபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான், இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதனை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள் அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது. ஆனால் இதை அனுமதிக்க முடியாது விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார்

புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகம் முன்பு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்து, பொது மக்களுக்கு நீர்மோர், சர்பத், குளிர்பானங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். இதேபோன்று புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதன் திறக்கப்பட்ட நீர் மோர் பந்தலையும் அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம் அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப்பொருள்கள் வருகிறது, பின் பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது, குஜராத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.’’ என்று கூறினார்.