இன்று நெருப்பு வளைய சூரியகிரகணம்..! அந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்து..! பரிகாரம் செய்ய வேண்டிய ராசி, நட்சத்திரத்தினர் யார் யார்?

எந்தெந்த நட்சத்திரம் மற்றும் ராசிக்காரர்கள் நாளை நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த செய்தியில் காண்போம்.


இந்தியாவில் நாளை காலை 10:22 முதல் மதியம் 1:44 மணி வரை சூரிய கிரகணம் நிலவும் என்று கூறப்படுகிறது. இந்த சூரிய கிரகணம் அவனது 11: 49 மணியளவில் உச்சமடையும். சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதுதான் சூரியகிரகணம். இந்த சம்பவமானது அமாவாசை அன்று மட்டுமே நிகழும். மேலும், நிலா சூரியனை மறைத்து, பின்னர் சூரியன் வெளியே வரும். இந்த கிரகணமானது இந்தியா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், சீனா, பாகிஸ்தான் முதலிய நாடுகளில் ஏற்படும். அப்போது வானிலை மேகமூட்டம் இன்றியிருந்தால் மக்கள் இந்த கிரகணத்தை காணலாம்.

இந்த சூரிய கிரகணம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நடைபெறுகிறது. அதனால் அதற்கு முன் மற்றும் பின் உள்ள நட்சத்திரங்களான திருவாதிரை மற்றும் ரோகிணி சேர்ந்த நபர்களும் பரிகாரம் செய்ய வேண்டியது அவசியமாகும். மிருகசீரிஷம் நட்சத்திரம் செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தில் பெற்றதால், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களை கொண்டவர்களும் பரிகாரம் செய்ய வேண்டும். 

கன்னி, துலாம், மகரம், கும்பம், ரிஷபம், மிதுனம், ஆகிய ராசிக்காரர்களும் நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டியது அவசியமாகும். சூரிய கிரகணம் முடிந்த பின்னர் 2 மணி அளவில் வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்ய உபயோகப்படுத்தும் தண்ணீரில், கல்லுப்பு, மஞ்சள், சிறிது அருகம்புல் ஆகியவற்றை சேர்த்து வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த பின்னர் குளிக்க வேண்டும். குளிக்க பயன்படுத்தப்படும் தண்ணீரில் ஒரு வெற்றிலையில் நான்காக வெட்டி, எலுமிச்சை பழ சாறு 3 சொட்டு ஊற்றி, அருகம்புல் மற்றும் வில்வ இலை ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு குளிக்க வேண்டும்.

"சகல தோஷம் நிவர்த்தியாமி" என்று கூறிவிட்டு குளித்தால் சூரிய கிரகணத்தால் ஏற்படும் தோஷம் நிச்சயம் நிவர்த்தியாகும். குளித்து முடித்த பின்னர் பூஜையறையில் சுத்தமான துணியை எடுத்து சுவாமி படங்களை துடைக்க வேண்டும். பூஜை அறையில் உள்ள விக்கிரகங்களை மஞ்சள் தண்ணீரில் 3 நிமிடங்கள் வைத்து எடுக்க வேண்டும். நிச்சயமாக பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பால், பன்னீர், விபூதி, அருகம்புள் அல்லது வெட்டிவேர் ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். அனைத்து விக்ரகங்களுக்கும் அபிஷேகம் செய்ய உபயோகப்படுத்தும் தண்ணீரில் வெட்டிவேர் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த நேரத்தில் விநாயகரை வழிபடுவது மிகுந்த நன்மையை தரும். அதன் பின்னர் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும். இவற்றை முறையாக செய்தால் நிச்சயமாக சூரிய கிரகணத்தின் போது ஏற்படும் தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம் என்று நம்பப்படுகிறது. இந்த கிரகண நேரத்தில் காயத்ரி மந்திரம், ஓம் நமோ நாராயணா அல்லது ஓம் நமச்சிவாய முதலிய மந்திரங்களை ஜபிப்பது எண்ணற்ற நன்மைகளை தரும் என்று நம்பப்படுகிறது.

இந்த செய்தியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.