சூரரைப் போற்று படத்தின் கதை இதுதானா..?

சூர்யா நடித்து வெளிவர இருக்கும் சூரரைப் போற்று படம் டெக்கான் எர் வேஸ் நிறுவனத்தை உருவாக்கிய ஜி ஆர் கோபிநாத் உடைய தான் வரலாறு ஆன Simply fly நூலை அடிப்படையாகக் கொண்டது என்று முருகவேள் ஒரு பதிவில் கூறியிருக்கிறார்.


டெக்கான் நிறுவனத்தை கோபிநாத் உருவாக்கிய கதையை சுவாரஸ்யமானது. நடுத்தர வர்க்கத்து க்கு மலிவு விலையில் இந்த விமான சேவையை வழங்க கோபிநாத் விரும்புகிறார். நடுத்தர வர்க்கம் இருக்கும் சிறு நகரங்களை விமான சேவை எல்லைக்குள் கொண்டு வருவதே போட்டியில் தாக்குப் பிடிக்கும் வழி.

கோபிநாத் இந்திய விமான சேவை வரலாற்றை ஆராய்ந்து நாட்டில் கை விடப்பட்டு இருக்கும் 500 விமானத் தளங்கள், நிலையங்கள் ஆகியவற்றின் பட்டியலை கண்டு பிடிக்கிறார். இவை இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் இருந்து பல்வேறு காலங்களில் தேவையை ஒட்டி உருவாக்கப் பட்டு பின்பு கைவிடப் பட்டவை.

இவற்றுக்கு விமான சேவையை தொடங்குவ தன் மூலம் நடுத்தர வர்க்க மர்க்கெடைக் கைப்பற்ற முடியும் என்று முடிவு செய்கிறார். இதனடிப்படையில் அரசும் விமான சேவையை விரிவாக்க நடவடிக்கை எடுக்கிறது. 

மாற்றி சிந்திப்பது, கார்ப்பரேட் போட்டி, பெரிய நிறுவனங்கள் சிரியவற்றை விழுங்குதல், விழ்ச்சி என்று கலர்புல் வாழ்க்கை. நவீன கார்ப்பரேட் சிந்தனையை புரிந்து கொள்ள கோபிநாத்தின் கதை உதவும். என்று கூறியிருக்கிறார்.