அரசு மருத்துவமனையின் தரம் உயரவேண்டும் என்று அள்ளிக்கொடுத்த ஜோதிகா..!

அரசு மருத்துவமனையின் தரம் உயரவேண்டும் என்று கோரிக்கை விடுத்த நடிகை ஜோதிகா, அதனை தரம் உயர்த்தும் வகையில், தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருக்கிறார்.!


தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு விஜயபாஸ்கர் அவர்களுடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருது துரை அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த உதவி அகரம் அரக்கட்டளை முலம் வழங்கப்பட்டு உள்ளது. 

ஜோதிகா சார்பில் மருத்துவ உபகரணங்களை திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் வழங்க சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். “ஜோதிகா அவர்கள் செய்திருக்கும் உதவி மகத்தானது. பாராட்டத்தக்கது. அரசின் சார்பில் நன்றி” என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்த்ராவ், “ஜோதிகா அவர்களின் சமூக அக்கறைக்குத் தலை வணங்குகிறேன்” என்றார். 

ரசிகர் மன்றம் வைத்துள்ள அத்தனை கலைஞர்களுக்கும் வரவேண்டிய சிந்தனை இது.