இன்று காலை, 10:22 - பகல், 1:32 மணி வரை நெருப்பு வளைய சூரிய கிரகணம்..! மதியம் 2 மணிக்கு கல் உப்பு கலந்த நீரில் நாம் குளிக்க வேண்டும்! ஏன் தெரியுமா?

நாளை நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தின் போது ஜாதக அமைப்புபடி யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும் என்பதனை இந்த செய்தியில் நாம் காண்போம்.


இந்தியாவில் நாளை காலை 10:22 முதல் மதியம் 1:44 மணி வரை சூரிய கிரகணம் நிலவும் என்று கூறப்படுகிறது. சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதுதான் சூரியகிரகணம். இந்த சம்பவமானது அமாவாசை அன்று மட்டுமே நிகழும். மேலும், நிலா சூரியனை மறைத்து, பின்னர் சூரியன் வெளியே வரும். இந்த கிரகணமானது இந்தியா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், சீனா, பாகிஸ்தான் முதலிய நாடுகளில் ஏற்படும். அப்போது வானிலை மேகமூட்டம் இன்றியிருந்தால் மக்கள் இந்த கிரகணத்தை காணலாம்.

சூரிய கிரகணம் குறித்து நம் நாட்டில் பல்வேறு விதமான நம்பிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஜாதக அமைப்புபடி ஞாயிறு அன்று பிறந்தவர்கள், ரோகினி, மிருகசீரிஷம், திருவாதிரை, சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், ஜாதக அமைப்பில் சூரிய திசை உள்ளவர்கள், புத்தி உள்ளவர்கள் ஆகியோர் நாளை மதியம் 2 மணிக்கு மேல் தண்ணீரில் கல் உப்பை சேர்த்து குளிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்திற்கு காணிக்கைகள் முடிந்து வைத்து, கோவில்கள் திறந்தபின் செலுத்த வேண்டும். இஷ்ட தெய்வங்களின் மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் சூரிய கிரகணத்தின் வீரியம் சற்று குறையலாம் என்றும் நம்பப்படுகிறது.

இந்த நேரத்தில் கிருமிகள் அதிக அளவில் பெருகக்கூடும் என்று கூறப்படுகிறது. இதனால் கிரகண நேரத்தில் சமைத்தல், வெளியே செல்லுதல், நீர் பருகுதல் முதலியவை தவிர்க்கப்படுகிறது. இருப்பினும் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அவர்கள் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவை உண்ண அறிவுறுத்தப்படுகிறார்கள். 

சூரிய கிரகணத்தின் போது நேரடியாக சூரியனை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் பார்வைத்திறன் முழுமையாக போவதற்கு வாய்ப்புகளுள்ளன. அதேபோன்று கிரகணத்தின் முன் சமைக்கப்பட்ட உணவின் தன்மை கிரகணம் நடைபெறும்போது முற்றிலும் மாறுபட்டு விடும். உணவின் கெட்டுப்போகும் தன்மையான கிரகண காலத்தில் மிகவும் அதிகம். ஆதலால் கிரகண காலத்தில் உணவு உண்பதை தவிர்க்க வேண்டும். 

கிரகண நேரத்தில் நம்முடைய செரிமான உறுப்புகள் சரிவர செயல்படாது. ஆகையால் அதிக அளவில் உணவை உண்பது என்பது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் இவை அனைத்தையும் அறிவியல்பூர்வமான கருத்துக்கள் நிராகரித்துள்ளன. 

இந்த செய்தியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.