மிடில் கிளாஸ் பொம்பளைங்க தான் கள்ளக்காதல் செய்வார்கள்! நான் ஹை கிளாஸ் பொம்பளை! வனிதாவின் பெட்ரூம் ரகசியம்!

நடிகை வனிதா தன்னுடைய மூன்றாவது திருமணத்தைப் பற்றி கருத்து தெரிவித்து வந்த பலருக்கும் பதிலடி அளிக்கும் விதமாக மிடில் கிளாஸ் பொம்பளைங்க தான் கள்ளக்காதல் செய்வார்கள் ஆனால் நான் அப்படி இல்லை என்று கூறிய வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


நடிகை வனிதா நேற்றைய முன் தினம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் பீட்டர் பாலை மூன்றாவதாக திருமணம் செய்து இருக்கிறார். இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னிடமிருந்து முறையாக விவாகரத்து பெறாமலேயே நடிகை வனிதாவை தனது கணவர் திருமணம் செய்து கொண்டிருப்பதாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதிலும் இந்த புகாரானது கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வனிதாவின் மூன்றாவது திருமணம் பற்றி பரபரப்பாக அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

இன்னிலையில் வனிதா தன்னுடைய திருமணத்தை பற்றி விமர்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி வழங்கும் வகையாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், 100 கோடி பேர்ல, பலர் தப்பு பண்ணிட்டு தான் இருக்காங்க. புருஷனை சொல்றாங்க வெளிய போய் தப்பு பண்ணிட்டு வராங்க. பொண்டாட்டி இருக்கும்போதே கேர்ள் ஃபிரண்ட் வச்சிக்கிறாங்க. செகண்ட் வைஃபும் வச்சிருக்காங்க . அவங்க கூடவே வாழ்ந்துட்டு திருப்பி வீட்டுக்கு வந்திருக்காங்க. இதெல்லாம் நடக்கிற நீங்க சொல்றீங்களா.? இது எல்லாமே நடந்துகிட்டு தான் இருக்கு..

இதெல்லாம் சினிமாக்காரங்க ஒன்னும் பண்றதில்ல. நார்மல் பப்ளிக் மிடில் கிளாஸ் மக்கள் தான் இந்த மாதிரி பண்றாங்க.. பொதுவாகவே சமூகத்தில் நிறைய தவறுகள் நடக்குது. அது சினிமாக்காரங்க கிட்ட நடந்தால் அது வெளிய தெரியுது. ஆனா எங்களால தப்பு பண்ண முடியாது. ஒருத்தரை வச்சிகிட்டு இன்னொருத்தர ஏமாத்த முடியாது. அப்படியே ஏமாத்தினா இன்னிக்கு இல்ல நாலும் நாளைக்கு கண்டிப்பா வெளியே வந்துடும். நான் இந்த அளவுக்கு பப்ளிசிட்டி பண்றேனா அவரை உண்மையிலேயே காதலிக்கிறேன். அவர் கூட வாழனும் நான் விரும்புறேன். அதுல எனக்கு எந்த அவமானமும் இல்லை.. இன்னொருத்தர் குடும்பத்தைச் சிதச்சிட்டு நான் வாழல என்று நடிகை வனிதா அந்த வீடியோவில் தன்னைப் பற்றி பேசிய அனைவருக்கும் தக்க பதிலடி அளித்திருக்கிறார். தற்போது அவர் பேசியுள்ள அந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.