திருமணத்திற்கு தயாரான போது சிம்புவுடன் செய்த செயல்..! நயன்தாரா - பிரபுதேவா பிரிய காரணமான அந்த சம்பவம்! என்ன தெரியுமா?

சிம்புவுடன் ஏற்பட்ட தகராறை பிரபுதேவா அவ்வப்போது குத்திக்காட்டியது மட்டுமே அவரை பிரிந்ததற்கு காரணம் என்று நடிகை நயன்தாரா கூறியதாக வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


கதாநாயகன், இயக்குனர், நடன இயக்குனர் போன்ற பல ரூபங்களில் தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமைகளை நிரூபித்தவர் நடிகர் பிரபுதேவா. இவருடைய நடனத்திற்கு ஆகவே இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது குறிப்பிடத்தக்கது. 1995-ஆம் ஆண்டில் இவர் ரம்லத் என்ற இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 

பிரபுதேவாவை திருமணம் செய்துகொண்ட காரணத்தினால் ரம்லத் இந்துவாக மதம் மாறி தன் பெயரை லதா என்று மாற்றிக்கொண்டார். இத்தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில், பிரபுதேவாவுக்கு தற்போது "லேடி சூப்பர் ஸ்டார்" என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாராவுடன் 2006-ஆம் ஆண்டில் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது.

இருவரும் "லிவ்விங் டுகெதர்" வாழ்க்கையை நீண்ட காலத்திற்கு வாழ்ந்துவந்தனர். இதனிடையே தன்னுடைய கணவர் நடிகையின் பின்னால் சுற்றித் திரிவதை புரிந்துகொண்ட லதா 2011-ஆம் ஆண்டில் பிரபுதேவாவிடம் இருந்து விவாகரத்து பெற்றார். லதாவின் சாபமானது பிரபுதேவாவின் காதலை சுக்கு நூறாக்கியது. அடுத்த வருடத்திலேயே பிரபுதேவாவும் நயன்தாராவும் பிரிந்து சென்றனர். 

அதற்கான காரணம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இருவரும் திருமணத்திற்கு தயாரான காலகட்டத்தில் பிரபுதேவா நயன்தாராவிடம் சிம்புவை பிரிந்தது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்துள்ளார். பின்னர் குத்திக்காட்டும் விதத்தில் நயன்தாராவிடம் பிரபுதேவா தொடர்ந்து பேசிவந்ததாக கூறப்படுகிறது.

தான் மிகவும் நேசித்து வந்த நபர், தன்னுடைய இன்னல்களை கண்டு ஆறுதல் கூறாமல் நோகடித்து வந்த செயலானது நயன்தாராவால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. தற்போது பிரபுதேவாவிடம் இருந்து பிரிவதாக நயன்தாரா முடிவெடுத்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன. தற்போது வரை இருவருக்கும் இடையே எந்தவித தொடர்புமில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.‌