திரும்பவும் வாசனை ஜெயிலில் போடுட்டாங்க.

கொதிக்கும் இளசுகள்


ஆபத்தான வகையில் பைக் ரேஸில் ஈடுபட்டு இளைஞர்களிடம் எக்கச்சக்க ஆதரவு பெற்றவர் டிடிஎஃப். வாசன். இவருக்கு 40 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள். இவர் மீண்டும் போலீஸில் சிக்கியிருக்கும் விவகாரம் இளசுகளிடம் கடும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில் இருந்து கோவை செல்லும்போது பாலுசெட்டி சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த டி.டி.எஃப்.வாசன், விபத்தில் சிக்கினார். அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தியதாக டி.டி.எஃப். வாசனை கைது செய்த போலீஸார், வழக்குப்பதிவு செய்தனர்.
பைக் ரேஸ் பிரியரான. டி.டி.எஃப் வாசனுக்கு வழக்கு ஒன்றில் 10 ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் தனது கார் மூலமாக ஊர் ஊராகச் சுற்றி வருகிறார். கார் ஓட்டியபடி வீடியோவாக பதிவு செய்து வருகிறார். அதுவே மதுரையில் அவர் மீது வழக்காக பதிவாகியுள்ளது.
மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் செல்போனில் பேசியபடி காரை அஜாக்கிராதையாக ஓட்டியதாக டி.டி.எஃப் வாசன் மீது 6 பிரிவுகளின். கீழ் அண்ணாநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தததுடன் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாமீன் எடுக்க முடியாத வகையில் ஒரு பிரிவில் கைது செய்யப்பட்டிருப்பதால் இப்போது வெளியே வருவதற்கு வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.
இந்த விவகாரம் அவரது ரசிகர்கள் மற்றும் ஃபாலோயர்ஸ்களிடம் கடுமையான எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. விடுதலை செய்யுங்கள் என்று இப்போதே குரல் கொடுக்கிறார்கள்.