கமலுக்கு விழுந்து ஊமைக் குத்து..! துரோகியான மகேந்திரன்! கோவையில் நடந்தது என்ன?

தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதல் கமல் முகத்தில் ஒரு விதி பீதியும் அச்சமும் கண்கூடாக தெரிந்து வருகிறது, இதற்கு காரணம் கோவையில் நடந்த சம்பவம் தான் என்கிறார்கள்.


கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மாநகரங்கள் மற்றும் பெரிய நகரங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் வாக்குகளை அள்ளினர். இதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழக அரசியல் களத்தில் திடீர் மவுசு ஏற்பட்டது. இதனால் கட்சியில் சேர்ந்து எம்எல்ஏ ஆகும் கனவில் ஏராளமானவர்கள் கமலுடன் கை கோர்த்தனர்.

இந்த சூழலில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக கமல் கட்சி படு தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து கமல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

ஆனால் மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவரான மகேந்திரன் மட்டும் கட்சியில் இருந்தே விலகிவிட்டார். மேலும் கமல் ஜனநாயகப்பூர்வமாக செயல்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகளையும் சுமத்தினார். அதே சமயம் மகேந்திரன் ஒரு துரோகி என்று கூறி கமல் அதிர வைத்தார். கமல் மக்கள் நீதி மய்யம் என்கிற ஒரு கட்சியை ஆரம்பிக்க காரணமே மகேந்திரன் தான் எனலாம்.

கமல் சினிமாவில் பீல்ட் அவுட் ஆகி வருமானத்திற்கு சிங்கி அடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு பிக்பாஸ் மூலம் தொலைக்காட்சியில் ஒரு அறிமுகத்தை பெற்றுக் கொடுத்ததில் மகேந்திரனுக்கு முக்கிய பங்கு உண்டு.

இதே போல் கமல் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கிய போது அவருக்கு உறுதுணையாக இருந்தவர் மகேந்திரன். கட்சியை கட்டமைத்ததிலும் மகேந்திரன் பங்கு முக்கியமானது என்கிறார்கள். இதே போல் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஒருங்கிணைத்து வாக்குகளை அக்கட்சி அள்ளுவதற்கு தேவையான சில பல மேட்டர்களையும் மகேந்திரன் செய்து கொடுத்ததாக சொல்கிறார்கள். மகேந்திரன் இருக்கும் துணிச்சலில் தான் சென்னையில் இருந்து கோவை தெற்கு தொகுதிக்கு சென்று கமல் போட்டியிட்டார்.

இதற்கு காரணம் நாடாளுமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் வேறு எந்த தொகுதியிலும் கிடைக்காத அளவிற்கு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாக்குகள் கிடைத்தன. ஆனால் தற்போதைய தேர்தலில் அங்கு போட்டியிட்டு கமல் தோல்வியை தழுவினார். இதன் பின்னணியில் கமல் டென்சன் ஆனதாகவும் அப்போது கமலுக்கும் மகேந்திரனுக்கும் இடையே மோதல் வெடித்ததாகவும் கூறுகிறார்கள்.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கோவையில் தான் தங்கியிருந்த அறைக்கு கமல் சென்றுள்ளார். அங்கு மகேந்திரனை வரவழைத்து கேட்க கூடாத கேள்விகளை எல்லாம் கமல் கேட்டதாக சொல்கிறார்கள்.

அத்தோடு கமீலா நாசர் தொடங்கி கட்சியின் நிறுவன பொதச் செயலாளர் அருணாச்சலம் வரை தன்னை விட்டு செல்ல மகேந்திரன் தான் காரணம் என்கிற ரீதியில் கமல் பேசியதாக கூறுகிறார்கள். அத்தோடு கட்சி படு தோல்வி அடையவும் மகேந்திரனே பொறுப்பு என்கிற ரீதியில் கமல் பேசிய போது பதிலுக்கு மகேந்திரனும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதாக சொல்கிறார்கள். அதாவது மகேந்திரன் பயன்படுத்திய வார்த்தைகள் கமலுக்கு விழுந்த ஊமைக்குத்துகளுக்கு சமம் என்று கூறுகிறார்கள்.

இதனை தொடர்ந்தேமகேந்திரனை கட்சியை விட்டு நீக்க கமல் முடிவு எடுத்ததாகவும் அதனை முன்கூட்டியே தெரிந்து கொண்டு மகேந்திரன் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். ஆனால் கமல் – மகேந்திரன் இடையே கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. அந்த விவகாரம் தொடர்பாக கமலுக்கு தற்போது மகேந்திரன் நெருக்கடி கொடுப்பதாக சொல்கிறார்கள். இதனால் தான் கடந்த இரண்டு மூன்று தினங்களாக மிகவும் இறுக்கமான முகத்துடன் கமல் நடமாடுவதாகவும் கூறுகிறார்கள்.