கனிமொழிக்கு அமைச்சர் பதவி ரெடி..!

- தி.மு.க. மத்திய அமைச்சர்கள் பட்டியல்


தமிழகத்தில் அறிவாலயம் ரொம்பவே சுவாரஸ்யமான இடம். பகுத்தறிவுக் கோட்டையாகவும் தி.மு.க.வின் அலுவலகமாகவும் கருதப்படும் இந்த இடத்தில் தான் பெரும் புள்ளிகள் அரசியல் எதிர்காலம் குறித்து ஆருடம் சொல்வார்கள்.

அந்த வகையில் இப்போது அறிவாலயத்தின் ஹாட்டஸ்ட் செய்தி என்னவென்றால், அடுத்த மத்திய அமைச்சர்கள் யார், அவர்களுக்கு என்ன பதவி என்பது தான்.

மக்களவைத் தேர்ததலில் பா.ஜ.க. தோல்வியைத் தழுவப் போகிறது என்றும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு அமையப் போகிறது என்பதிலும் இவர்கள் ரொம்பவே உறுதியாக இருக்கிறார்கள்.

ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சிக்கு அத்தனை தொகுதிகள் கிடைக்குமா என்றெல்லாம் யாரும் அவர்களிடம் கேள்விகள் கேட்கக்கூடாது. அப்படியே கேட்டாலும், ‘அதெல்லாம் ஜெயிச்சுடும்ப்பா…’ என்று அசால்ட்டாகச் சொல்வார்கள்.

அந்த வகையில், காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராகப் போகும் முக்கியப் புள்ளிகள் பட்டியல் தயாராகிவிட்டது. அவர்களுக்கு இலாக்காவும் ஒதுக்கிவிட்டனர். ரிசல்ட் அறிவிப்பு முடிந்தவுடன் நேரடியாக ஜனாதிபதி மாளிகைக்குப் போய் பதவி ஏற்க வேண்டியது தான் பாக்கி.

இந்த முறை டி.ஆர்.பாலுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்போவது இல்லை என்று உறுதியாகச் சொல்கிறார்கள். கனிமொழிக்கு முதன் முறையாக அமைச்சரவை பதவி கிடைக்கிறது. உதயநிதியின் தயவில் ஒருவர் அமைச்சராகிறார்.

ஜெகத்ரட்சகன் – வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர்

ஆ.ராசா – தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்

கனிமொழி – மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர்

தயாநிதி மாறன் – சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்

கே.இ.பிரகாஷ் – இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்