அடுத்து சீதாவுக்கு கோயில் கட்டுவோம்… அமித் ஷா ஆவேசம்

நான்கு கட்டத் தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில் ராமர் கோயிலை மட்டுமே தங்கள் சாதனையாக மத்திய அரசு கூறிவந்தது. இந்த நிலையில் அடுத்து சீதாவுக்கும் கோயில் கட்டுவோம் என்று அமித் ஷா பேசியது பரபரப்பாகியுள்ளது.

பீகாரில் பரப்புரை மேற்கொண்ட அமித் ஷா, ‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டியது போன்று சீதா பிறந்த பூமுயான சீதாமர்ஹியில் சீதாவுக்கான பிரமாண்ட கோயிலை பா.ஜ.க. அரசு கட்டும்’’ என்று கூறியிருக்கிறார்.

அதேபோல், ‘’பா.ஜ.க. 400 சீட் வாங்கி வெற்றி பெற்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை உறுதியாக மீட்போம்’’ என்றும் கூறியிருக்கிறார். இந்த விஷயத்தில், ‘’கண்டிப்பாக 400 சீட் கிடைக்காது என்ற நம்பிக்கையில்தான் இப்படி அமித் ஷா பேசுகிறார். அடுத்து ஆட்சியில் அமர்ந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் என்று சொல்ல வேண்டியது தானே, எதற்காக 400 சீட் வேண்டும்’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறது காங்கிரஸ்.