என்னாது நித்தியானந்தா ஈகுவடார் நாட்டிலும் இல்லையா? மோடியின் உளவுப் படை புறாக்கறி சாப்பிடுகிறதா? நித்தியின் டீன் ஏஜ் படம் இது!

நித்தியானந்தா எல்லோரையும் கவர்ந்து ஏமாற்றிவிடுகிறார் என்பதுதான், அவர் மீது அனைவரும் வைக்கும் குற்றச்சாட்டு.


லட்சக்கணக்கான பக்தர்களைக் கொண்டுள்ள நித்திக்கு எதிராக ஒருசிலர் மட்டுமே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நித்தியானந்தா கூடுவிட்டு கூடு பாயும் வித்தை தெரிந்தவர் என்றும் சிலர் சொல்வதுண்டு.

அது உண்மைதானோ என்று எண்ணும் அளவுக்கு அவரது நடவடிக்கைகள் இருக்கின்றன. ஆம், கைலாசா என்று பெயரிட்டு ஒரு குட்டித் தீவில் இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், நாலைந்து மாதங்களுக்கு முன்னரே நித்தி அந்தத் தீவில் இருந்து கிளம்பிவிட்டதாக ஈகுவடார் தெரிவித்துள்ளது.

ஆம், ஈகுவடார் தூதர் ஜெய்ம் மார்ச்சன் ரோமிரோ, “ஈகுவடார் ஒரு இறையாண்மையுள்ள, சுயாதீன குடியரசு நாடு. இங்கு சட்டத்திற்கு புறம்பாக எந்த வெளிநாட்டுக்காரரும் நிலம் வாங்கவில்லை. நித்தியானந்தா 2018ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதியன்று ஈகுவடாரின் குவாயாகில் சுற்றுலாப் பயணியாக நுழைந்தார். பின்னர் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேறிவிட்டார்’’ என்று தெரிவித்திருக்கிறார். 

அதன்பிறகு அவர் எங்கே போனார் என்று தெரியாமல்தான், அவரை பிடிக்க அவசர சட்டம் எல்லாம் இயற்றிக்கொண்டு இருக்கிறது மத்திய அரசும், மாநில அரசுகளும். ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் இடம் பெயரும் நித்தியானந்தாவை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மோடியின் உளவுப்படை இருப்பதுதான் பரிதாபம்.

இப்போது நித்தியின் பேச்சு ஒன்று வைரலாகிவருகிறது. ‘என்னை பேசாம விட்டுருந்தா நான் வளர்ந்திருக்க மாட்டேனடா’ என்கிறார். உண்மையில் அவர் டீன் ஏஜ் வயதில் எத்தனை எளிமையாக இருக்கிறார் என்று பாருங்கள்.