எம்.ஜி.ஆர். வாக்கை காப்பாற்றிய ஜெயலலிதா

எம்.ஜி.ஆர். மறையும் வரையிலும், நீதிமன்ற சட்ட பிரச்னைகளால் சென்னை மாநகராட்சிக்குத் தேர்தல் நடக்கவே இல்லை. அதனால் அன்று எம்.ஜி.ஆர். கொடுக்க நினைத்த மேயர் பதவியை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா கொடுத்து சாதனை செய்திருக்கிறார்.


- என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 5

சைதை துரைசாமியை 2011ம் ஆண்டு சென்னை பெருநகர மேயராக அறிவித்து வெற்றிபெற வைத்தது ஜெயலலிதா என்றாலும், அவரை சென்னை மேயராக்க ஆசைப்பட்டவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்பது வரலாற்றுத் தகவல்.

1980 சட்டமன்றத் தேர்தலில் அண்ணா தி.மு.க. சார்பில் சைதாப்பேட்டை தொகுதியில் சைதை துரைசாமியை எம்.ஜி.ஆர். நிறுத்தினார். தமிழகம் முழுக்க அ.தி.மு.க. மாபெரும் வெற்றிபெற்ற நிலையில், சைதை துரைசாமி மிகவும் சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

தோல்வி அடைந்த முகத்துடன் சைதை துரைசாமி எம்.ஜி.ஆரை சந்தித்தபோது, ‘’நீ ஜெயிச்சிருந்தா பதவி கொடுக்கலாம்னு நினைச்சேன். பரவாயில்லை. கவலைப்படாத. நீதான் அதிமுக-வின் முதல் சென்னை மேயர், இப்பவே அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்’ என்று உறுதி கொடுத்தார்.

ஆனால் எம்.ஜி.ஆர். மறையும் வரையிலும், நீதிமன்ற சட்ட பிரச்னைகளால் சென்னை மாநகராட்சிக்குத் தேர்தல் நடக்கவே இல்லை. அதனால் அன்று எம்.ஜி.ஆர். கொடுக்க நினைத்த மேயர் பதவியை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா கொடுத்து சாதனை செய்திருக்கிறார்.

பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொண்ட ஜெயலலிதா கிளம்பிய பிறகு, மற்ற உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. வேலை முடிந்தது என்று எல்லோரும் வீட்டுக்குக் கிளம்பிய நேரத்திலும் சைதை துரைசாமி அங்கிருந்து அசையவே இல்லை.

பொதுவாகவே மேயர் பதவியை அலங்காரப் பதவியாகவே அது வரையிலும் இருந்த அத்தனை அரசியல்வாதிகளும் பயன்படுத்திக் கொண்டார்கள். பொதுமக்களிடம் புகார் மனு வாங்கும் தருணங்களிலும் அலுவல் மீட்டிங் இருக்கும் தருணங்களிலும் மட்டும் எட்டிப் பார்ப்பார்கள். மற்ற எல்லா பணிகளையும் அதிகாரிகளே செய்துவிடுவார்கள், கையெழுத்து போடும் மேயராகவே இருந்துவந்தார்கள்.

அப்படித்தான் சைதை துரைசாமியும் இருப்பார் என்று நினைத்தார்கள். ஆனால், யாரும் எதிர்பார்க்காத ஒன்று நடந்தது.