சார்ஜ் போட்டபடி செல்ஃபோன் பேச்சு! கொடூரமாக செத்த இளம் பெண்!

பெங்களூரு: சார்ஜ் போட்டபடி செல்ஃபோனில் பேசிய இளம்பெண், பரிதாபமாக உயிரிழந்தார்.


இன்றைய சூழலில், பலரும் சார்ஜ் போட்டபடி, செல்ஃபோனில் பேசுவதும், செல்ஃபோன் சூடாகி வெடித்தோ அல்லது ஃபோன் வழியாக மின்சாரம் பாய்ந்தோ அவர்கள் உயிரிழப்பதும் வாடிக்கையாக உள்ளது. 

இதன்படி, கர்நாடகா மாநிலம், மாண்டியாவில் சௌபாக்யா என்ற 30 வயதுப் பெண், தனது செல்ஃபோனில் சார்ஜ் போட்டபடி, பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ஷார்ட் சர்க்யூட் காரணமாக, திடீரென, அவர்மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி போலீசார் வழக்குப் பதிந்து  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  இளம்பெண் எதிர்பாராமல் இறந்தாரா அல்லது இது திட்டமிடப்பட்ட கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஏனென்றால் அந்த பெண் இருந்த இடத்தில் கொலைக்கான சில தடயங்கள் இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் சிலரை அழைத்து அவர்கள் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.