இன்றைய நிலையில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் என்ன செய்வார் ..?

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா வரும் அக்டோபர் மாதம் விடுதலை செய்யப்படுவார் என்று ஒரு பேச்சு இருக்கிறது. அப்படியொரு நிலைமை ஏற்பட்டால் தமிழக அரசியலில் எப்படிப்பட்ட மாற்றம் நிகழும் என்று ஒரு கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் மட்டுமே இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதாம். இந்த கருத்துக்கணிப்பை யார் எடுத்தார்கள் என்பதை சொல்லாமல், இதன் முடிவுகளை மட்டும் கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இன்றைய நிலையில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், அவர் என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலாக, 1. அ.தி.மு.க.வில் இணைய வேண்டும். 2. அ.ம.மு.க.வில் இணைய வேண்டும் மற்றும் 3. அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்று கேட்கப்பட்டு இருந்தது.

அதில், பெரும்பாலோர் கொடுத்த பதில் என்ன தெரியுமா? சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்பதுதான். ஜெயலலிதா மரணத்தில் இன்னமும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு சந்தேகம் இருக்கவே செய்கிறது. ஆகவே, இந்த நேரத்தில் அவர் அ.தி.மு.க.வில் சேர்வதும், சேர்ப்பதும் சரியாக இருக்காது என்று அந்த சர்வே கூறுகிறதாம்.

இந்த செய்தி தலைமை ஒருங்கிணைப்பாளர்களிடம் போய்ச் சேர்ந்துவிட்டதாம். இனி, நல்லதே நடக்கும் என்கிறார்கள்.