கணவனுக்கு சாப்பாட்டில் கொசு மருந்து! 3 மாத கர்ப்பிணி மனைவி பிறகு செய்த தகாத செயல்! அதிர்ச்சியில் போலீஸ்!

திருப்பூர் அருகே கணவனுக்கு சாப்பாட்டில் கொசு மருந்தை கலந்து கொடுத்துவிட்டு கர்ப்பிணி மனைவி கள்ளக் காதலனுடன் ஓடிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது நொச்சிப்பாளையம். இங்கு வசித்து வருபவர் முனுசாமி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முனுசாமி சந்தியா எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

21 வயதாகும் சந்தியா திருமணத்திற்கு இஷ்டம் இல்லாமல் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் உன்னுடன் வாழ மாட்டேன் என்று சந்தியா கூறியுள்ளார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் முனுசாமி மனைவி கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்ட பிறகு மயங்கியுள்ளார். கண் விழித்து பார்த்த போது வீட்டில் மனைவி இல்லை. மேலும் அவரது துணிமணிகள் மற்றும் டூவீலரையும் காணவில்லை.

இதனை அடுத்து மருத்துவமனைக்கு சென்ற போது தான் அவருக்கு சாப்பாட்டில் கொசு மருந்து கலந்து கொடுத்தது தெரியவந்தது. இதனை அடுத்து காவல் நிலையம் சென்ற முனுசாமி தன் மனைவி மீது புகார் அளித்துள்ளார்.

தனக்கு சாப்பாட்டில் கொசு மருந்தை கொடுத்துவிட்டு தனது மனைவி கள்ளக் காதலனுடன் ஓடிவிட்டதாக அவர் கூறியுள்ளார். மேலும் தனது மனைவி 3 மாதம் கர்ப்பமாக வேறு உள்ளதாக கூறி போலீசாரை அதிர வைத்துள்ளார் முனுசாமி.

போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே இது குறித்து கேட்க சந்தியாவை தொடர்பு கொள்ள முயன்ற போது முடியவில்லை.