தமிழக அரசு அறிவிப்பு! சத்துணவுத் திட்டத்தில் வேலை வாய்ப்பு.. ஏராளமான காலி பணியிடங்கள்…

தமிழகத்தில், சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்களிடம்நேர்காணல் நடத்த டி.ஆர்.ஓ., தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் ஒவ்வொரு சத்துணவு மையத்திற்கும் அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர்கள் நியமிக்கப்படுவர். வயது முதிர்வால் 60 வயதில் அமைப்பாளர், 58 வயதில் சமையலர், உதவியாளர்கள் ஓய்வு பெற்று விடுவர். மாநில அளவில் சத்துணவு திட்டத்தில் ஏராளமான காலி பணியிடங்கள் உள்ளன. அமைப்பாளர், சமையலர், உதவியாளர்பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் நடத்த, மாவட்ட அளவில் டி.ஆர்.ஓ., தலைமையில் குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி முதல் குழுவின்தலைவராக மாவட்ட வருவாய் அலுவலர், 2வது குழு தலைவராக கலெக்டர் பி.ஏ.,(ஊரக வளர்ச்சி), 3வது குழுவின் தலைவராககலெக்டர் பி.ஏ., (சத்துணவு திட்டம்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இக்குழுவின் உறுப்பினர்களாக அந்தந்த பகுதி தாசில்தார், பி.டி.ஓ.,க்கள் செயல்படுவர் என அரசு செயலர் மதுமதி தெரிவித்துள்ளார்.

உங்களுக்குப் பயன்படுகிறதோ இல்லையோ, பலருக்கும் தெரியப்படுத்துங்கள்.