அத்திவரதரை திட்டிய சுகிசிவம் கிறிஸ்தவ மதம் மாறுகிறாரா? வைரல் ஆடியோ!

ஆன்மிகப் பேச்சாளர் சுகிசிவம் கொஞ்சம் அதிரடி பேர்வழி.


ஆன்மிகத்தில் நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துக்கள் இருந்தால், அதனை விலக்கிவைத்து பேசுவார். அவர் அப்படி பேசிய விவகாரம்தான் இப்போது வைரலாகியுள்ளது. அப்படி அவர் என்ன பேசினார்..?

இவ்வளவு நாட்களாக நம் ஊரில் உள்ள பெருமாளுக்கு வராத 'பவர்' 40 வருடம் தண்ணீருக்குள் இருந்து வந்திருப்பவருக்கு இருக்கும் என்று நினைத்தால்... இதை நான் எங்கோ போய் சொல்வது? அத்தி வரதப்பா... புத்தி வராதப்பா...

இன்றைக்கு இது எவ்வளவு பெரிய சூதாட்டமாக மாறியிருக்கிறது. வயதானவர்கள் சென்று நசுங்கி, செத்து, கர்ப்பிணி பெண்கள் சென்று நசுங்கி துன்பப்படுகிறார்கள். நான் நிஜமாகவே கேட்கிறேன். நாம் கஷ்டப்பட வேண்டும் என்று கடவுள் நினைப்பாரா? நாம் கஷ்டப்பட வேண்டும் என்று நினைத்தால் அவர் கடவுளா? ஒரு நாளும் கடவுள் அப்படி நினைக்க மாட்டார்.

இந்த ஊரில் உள்ள சாமிக்கு இல்லாத சக்தி, அந்த ஊரில் உள்ள சாமிக்கு இல்லாத சக்தி, இதுவரை நாம் கும்பிட்ட எந்த சாமிக்கும் இல்லாத சக்தி, இப்போது புதிதாக கிடைத்திருக்கிற இவருக்கு மட்டுமே இருக்கிறது என்று நினைக்கிறோம்.

நீங்கள் இருக்கிறபடி இருந்தால்.... கடவுள் உங்கள் வீடு தேடி வந்து அருள் செய்யத் தயாராக இருக்கிறார் என்று பேசியிருக்கிறார். இந்த பேச்சில் அத்திவரதருக்கு பவர் இருக்கிறதா என்பதை மட்டும் கட் செய்து வைரல் ஆடியோவாக்கிவிட்டனர்.

இதை அறிந்து, ஆர்.எஸ்.எஸ். நிறுவனத்தலைவர் கோவை ராமநாதன் நேரடியாக சுகிசிவத்திடம் பேசியிருக்கிறார். அப்போது, ‘நான் செத்தாலும் இந்துவாகத்தான் சாவேன். யாரோ என் மீது களங்கம் சுமத்துகிறார்கள்’ என்று பரிதாபமாக விளக்கம் தெரிவித்திருக்கிறார்.