இறால் மீனை புஸ்டியாக்க ஜெலட்டின் ஊசி! வாடிக்கையாளர்கள் உயிரோடு விளையாடும் வியாபாரிகள்!

இறால் மீன் ஆரோக்கியமாகவூம் சாறு நிறைந்ததாகவும் தோன்ற வேண்டும் என்பதற்காக ஜெலட்டின் ஊசி போடப்படுவது தெரிய வந்துள்ளது.


சிறிது காலம் முன்பு வரை கலப்படம் இருந்தாலும் அது மக்களின் உயிரோடு விளையாடும் வகையில் இருப்பதில்லை என்ற நிலையில் தற்போது வியாபாரிகளின் பேராசை மக்களின் உயிர் மீது கை வைக்கவும் தயங்காத நிலையை ஏறபடுத்தியிருக்கிறது. அந்த வகை ஏமாற்று வேலை தான் சீனாவில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை ஒரு பெண் கடையில் இருந்து இறால் மீன் வாங்கி வந்தார்.

அதன் தோற்றம் ஆரோக்கியமானதாக சத்துமிக்கதாகவ்ம் இருந்தாலும் அந்தப் பெண்ணின் நுண்ணுணர்வுக்கு அதில் ஏதோ தவறு இருப்பதாகத் தோன்றியது. இந்நிலையில் அந்த மீனை உரிக்கத் தொடங்கியப் போது தலையில் ஜெலட்டின் நிரம்பியிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இறாலை உலர்த்தி, காய வைத்த பிறகு அவை ஆரோக்கியமாகவும் புஷ்டியாகவும் காணப்படுவதற்காக வியாபாரிகள் ஜெலட்டினை ஊசி மூலம் செலுத்துவது, அதன் மூலம் இறால்கள் 20 முதல் 30 சதவிகிதம் கூடுதல் எடையுடன் இருப்பதால் கூடுதல் லாபம் கிடைப்பதும் தெரிய வந்துள்ளது. 

இனியும் தொடர்ந்து இறால்களை வாங்கி உண்பதா அல்லது இறால் சாப்பிடும் பழக்கத்தை அறவே கைவிடுவதா என்பது மக்களிடையே விவாதப் பொருளாகியிருக்கிறது.