ராகுல் காந்தி இந்தியரா? பிரிட்டிஷ் குடிமகனா? உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியனா அல்லது பிரிட்டிஷ் குடிமகனா என்பது குறித்து உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.


பிரிட்டனை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக ராகுல்காந்தி இருந்தார் என்றும், அந்த நிறுவன ஆவணங்களில் ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகன் என்று கூறப்பட்டுள்ளதாகவும் சுப்ரமணியசாமி புகார் கூறி வருகிறார்.

இந்த நிலையில் ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ராகுல்காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் இல்லை என்பது தெளிவாகும் வரை அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரப்பட்டது. 

இதை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு, மனு ஏற்கத்தக்கது கூட அல்ல என்று கூறி தள்ளுபடி செய்தது. வெளிநாட்டை சேர்ந்த ஏதோ ஒரு நிறுவனம் கூறியதற்காக ராகுல்காந்தி பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர் ஆகிவிடுவாரா? என்றும் தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது. இதன் மூலம் ராகுல் காந்தி இந்தியர் என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.