ரஜினிகாந்த் ஒரு அரைவேக்காடு. டென்ஷன் ஆகும் முஸ்லீம் அமைப்பு!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களுக்கு இந்தியாவில் மட்டுமில்லாது ஐரேப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நடிகர் ரஜினிகாந்த் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் குறித்து தவறான தகவல்களை நாட்டு மக்களிடம் தெரிவித்துள்ளார் என்று இந்திய தேசிய லீக் மாநிலச் செயலாளர் ஜகிருத்தீன் அஹமது.


அவரது அறிக்கையில், என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றில் மத்திய அரசு எந்த மாதிரியான விஷமங்களை செய்துள்ளது என நடிகர் ரஜினிகாந்திற்கு தெரியுமா, காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக கூறும் நடிகர் ரஜினிகாந்துக்கு, அந்த மாதிரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது என்பது தெரியுமா, அப்படி பார்த்தால் 2021ல் எடுக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை 2020ல் மத்திய அரசு எடுக்க வேண்டிய அவசியம் என்ன என நடிகர் ரஜினிகாந்த் விளக்குவாரா. 

நாட்டில் இதுவரை எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் இல்லாத கேள்விகள் தற்போது பாஜக அரசு எடுக்கவுள்ள கணக்கெடுப்பில் இடம்பெற்றுள்ளது. சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பிறகு நீ எந்த மதத்தைச் சார்ந்தவன்? உன் தந்தை எந்த மதத்தைச் சார்ந்தவன்? நீ எங்கே பிறந்தாய்? இது போன்ற கேள்விகள் கேட்க வேண்டிய அவசியம் என்ன.

பல்வேறு சர்ச்சைகளுக்கு பாஜக அரசு சிக்கி தவிக்கும் போது அப்போதெல்லாம் நடிகர் ரஜினிகாந்த் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவிப்பது என்பது வாடிக்கையாகி விட்டது. ரஜினி தனது காவி சாயத்தை பூச வேண்டாம் என கூறி விட்டு, தான் காவி கலருக்கு ஒளிந்து கொண்டிருப்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மாணவர்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள் என கருத்து கூறும் நடிகர் ரஜினிகாந்த், மாணவர்களின் அறவழி போராட்டத்தை இழிவுப்படுத்தியிருக்கிறார். 

மேலும் மாணவர்கள் மீது எப்ஐஆர் போட்டால் வாழ்க்கையே போய்விடும் என மறைமுக மிரட்டல் விடுத்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு இந்திய தேசிய லீக் தனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. அதுமட்டுமின்றி இஸ்லாமியர்களை மதகுருமார்கள் தவறாக வழிநடத்துவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. இஸ்லாமிய மதகுருமார்கள் பற்றி நடிகர் ரஜினிகாந்த் போன்ற அறைவேக்காடுகளுக்கு என்ன தெரியும். இஸ்லாம் என்பது மதம் அல்ல மார்க்கம் என்பதை ஆன்மீக அரசியல் குறித்து பேசி வரும் நடிகர் ரஜினிகாந்த் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமியர்களையும், மதக்குருமார்களையும் இழிவுப்படுத்தி பேசிய நடிகர் ரஜினிகாந்த் தனது பேச்சை இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும் . நடிகர் ரஜினிகாந்த் எனும் பொம்மலாட்ட பொம்மையின் கயிறு பாஜகவிடம் உள்ளது. பாஜக போடும் தாளங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆடி வருகிறார். அவரது ஆட்டம் யாருடையது என்பதை மக்கள் தற்போது நன்கு உணர தொடங்கிவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.