இசை கேட்டுக்கொண்டு தியானம் செய்தால் உங்கள் மன அழுத்தம் குறைவது நிச்சயம்!

தியானத்தின் போது இசை கேட்டால் முழுமையான உடல் ஆரோக்கியம் கிடைக்குமாம். உடல், மனது என அனைத்துமே சாந்தமாக இருக்குமாம்.


தியானம் என்பதே மனதை அமைதிப்படுத்துவதற்கு தான். அப்படிப்பட்ட அமைதி நிலையில், மனதிற்கு இனிய இசையை கேட்கும் போது, மனமானது மிகுந்த அமைதிக்கு உள்ளாகும். மெல்லிசையானது, அமைதியான சூழலை உருவாக்குவதால் தியானத்தால் கிடைக்கும் நன்மைகள் மேலும் அதிகமாக கிடைக்கக்கூடும். இன்னிசை, மெல்லிசை போன்ற அமைதியான பாடல்களை கேட்க வேண்டும்.

உண்ணும் உணவில் பலருக்கு கட்டுப்பாடு என்பதே இருக்காது. அதுவே, இசையை கேட்டுக்கொண்டே தியானம் செய்து பாருங்கள், எப்படிப்பட்ட சாப்பாட்டு பிரியரும் தங்களது உணவில் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தால், நிச்சயம் அதனை செய்ய முடியும். உடல் எடை அதிகரிக்க வேண்டும் என நினைப்பவர்களும் நிச்சயம் இசையுடன் கூடிய தியானத்தை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

தியானம் செய்யும் போது, மனதை ஒருநிலைப்படுத்துவது என்பது தான் முக்கியம். அப்படி செய்ய முயற்சிக்கும் போது சிறு சிறு தொந்தரவுகள் இருந்தால், மனதை ஒருநிலைப்படுத்துவதில் சிரமம் ஏற்படும். அதுவே, தியானம் செய்யும் போது மெல்லிசை கேட்டுக் கொண்டே செய்தால் கவனச் சிதறல் என்ற பேச்சுக்கு இடமே இருக்காது. இதன்மூலம், உங்கள் மனஅழுத்தம் குறைவது நிச்சயம்.