ஓடும் ரயிலில் இளைஞனின் கைவிரலை கடித்து துப்பிய பயணி! அதிர வைக்கும் காரணம்!

மும்பையில் புறநகர் ரயிலில் பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சக பயணி ஒருவர் இன்னொருவரின் விரலை கடித்து துப்பிய சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மும்பை மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் அதிகப்படியான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் உள்ள லோக்கல் ரயிலில் இளைஞர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டதில் சக பயணியின் விரலை கடித்து திருப்பியுள்ளார்.

கண்சோலி பகுதியை சேர்ந்தவர் மகேஷ் இவர் கடந்த வாரம் மும்பையில் உள்ள தாதர் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பயணிகள் நெருக்கடியில் சென்றுள்ளனர்.

இதையடுத்து ரயில் குர்லா ஸ்டேஷனை அடைந்ததும் அதே பெட்டியில் ஆஷிக் என்பவர் ஏற முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் மகேஷ் அவரை ஏற விடாமல் தடுத்து நின்றுள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த ஆஷிக் மகேஸ் என்பவரின் ஆட்காட்டி விரலை கடித்து துண்டாக்கிள்ளார். 

 இதில் பலத்த காயம் அடைந்த மகேஷின் விரலிலிருந்து ரத்தம் வழிய சக பயணிகள் அலறியடித்துக் கொண்டு வழிவிட்டனர்.இதையடுத்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மகேஷை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மற்றும் ஆஷிக் என்பவரின் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் மகேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது விரலை திரும்ப ஒட்ட முடியாது என கூறியுள்ளனர். தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.