நித்தியானந்தாவுடன் சென்ற என் 2 மகள்களும் மாயம்..! கதறி அழும் தாய்! ஆசிரமத்தில் நடந்தது என்ன?

குஜராத் மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் நித்யானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது இரு மகள்களையும் மீட்டு தரும்படி அம்மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளன. இந்த சம்பவம் நித்யானந்தா ஆசிரமத்தில் தொடரும் சர்ச்சைகளில் ஒன்றாகியுள்ளன.


கடந்த சில மாதங்களில் நித்யானந்தா பற்றி பல சர்ச்சைகள் வெளிவந்த நிலையில், தற்போது குஜராத் மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் அம்மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளன. 

அந்த வழக்கில் தம்பதியர் கூறுவது, பெங்களூரிலுள்ள நித்யானந்தாவுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் 7 முதல் 15 வயதுடைய தங்களது 4 மகள்களை கடந்த 2013ம் ஆண்டு சேர்த்ததாக தெரிவித்தனர். பின்னர், அவர்கள் பெங்களூரிலிருந்து, அகமதாபாத்திலுள்ள கிளைக்கு மாற்றப்பட்ட செய்தியறிந்து பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த தகவலை அடுத்து இவர்கள் அகமதாபாத் ஆசிரமத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு மகள்களை பார்க்க அகமதாபாத் ஆசிரம ஊழியர்கள் அனுமதிக்காததால். இதனை அடுத்து, காவல் துறையினரிடம் புகார் தெரிவித்து, பின் காவல் அதிகாரியுடன் அங்கு சென்றுள்ளார்.

ஆனால், அங்கு இளைய மகள்கள் இருவரை மட்டுமே மீட்க முடிந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மூத்த மகள்கள் லோகமுத்ரா மற்றும் நந்திதா தங்களுடன் வர மறுத்து விட்டதாகவும், அவர்களை மீட்டுத் தரவேண்டும் எனவும் ஜனார்த்தனா ஷர்மா மற்றும் அவரது மனைவியும் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது பெரும் பரப்பபை ஏற்படுத்தியது.