ஹவாலா பறிமாற்றம்..! மாரிதாஸ் வெளியிட்ட வீடியோ! பதற்றத்தில் திருமுருகன் காந்தி!

வெளிநாடுகளில் இருந்து கிடைத்த ஹவாலா பணத்தில்தான் மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி போராட்டம் நடத்தி வந்ததாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.


சமூக செயற்பாட்டளார் மாரிதாஸ் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவ்வப்போது யுடியுபில் வீடியோ வெளியிட்டு வருகிறார். அதில சமூக அரசியலை பொதுமக்களும், மாணவர்களும் எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பேசுவார்.

சில நாட்கள் முன்னர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஹவாலா பணத்தில்தான் போராட்டம் நடத்தி வருவதாக தெரிவித்தார். அவருக்கு உடந்தையாக லாட்டரி அதிபர் மார்ட்டினின் 2வது மகனும் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து 4 ஆதாரங்களையும் மாரிதாஸ் வெளியிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் திருமுருகன் காந்தி மற்றும் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனுக்கு சிக்கல் எழுந்துள்ளது. தற்போது வருமான வரித்துறை எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் திருமுருகன் காந்தி உள்ளதாக தெரிகிறது.