வேற ஒருத்தனோட இருந்தாள்..! அதான் கழுத்தை அறுத்து போட்டுட்டேன்..! ரத்த வெள்ளத்தில் காதலி! காதலன் சொன்ன பகீர் தகவல்!

ஐதராபாத்: சந்தேகப்பட்டு காதலியை கொன்ற காதலன் போலீசில் சரணடைந்தார்.


தெலுங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இதன்பேரில், முகமது சமி எனும் இளைஞர் வாரங்கல் மத்திய சிறைப் போலீசாரிடம் சரணடைந்தார். அவரை கைது செய்து விசாரித்தபோது,  

திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. இதன்படி, கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் முனிகலா ஹாரதி. அந்த பெண்ணின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் முகமது ஷாகித். இவர்கள் 2 பேரும் நீண்ட காலமாக பழகி வந்த நிலையில், அது காதலாக மாறியது. ஆனால், ஷாகித் மிக தீவிரமாக காதலித்துள்ளார். இதனால்,  

அந்த பெண் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் அதனை ஷாகித் சந்தேகப்படுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளார். காலேஜ் படித்து முடித்த நிலையில், ஷாகித் அரசுப் பணி தேர்வுக்காக, ஹானம்கொண்டா பகுதியில் தனி வீடு வாடகைக்கு எடுத்து, தங்கி படித்து வந்துள்ளார். ஷாகித்தை சந்தித்து நீண்ட நாள் ஆன நிலையில்,  

ஹாரதி கடந்த வெள்ளிக்கிழமை ஹானம்கொண்டாவிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது,

பிளேடு ஒன்றை எடுத்து ஹாரதியின் கழுத்தை ஷாகித் அறுத்துக் கொன்றார். பிறகு, போலீசில் சரணடைந்தார். இருவரது வீட்டிலும் காதலுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை எனக் கூறப்படுகிறது. அப்படியிருந்தும், சந்தேகத்தின் பேரில் ஷாகித் இந்த கொலையை செய்தது இரு வீட்டினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.