மீனவர் வலையில் சிக்கிய 23 கோடி ரூபாய் மதிப்பு பிரமாண்ட டூனா மீன்..! ஆனால் அவர் செய்த நெகிழ்ச்சி செயல்! என்ன, ஏன் தெரியுமா?

லண்டன்: 3 மில்லியன் யூரோ மதிப்புள்ள ராட்சத ட்யூனா மீன் வலையில் சிக்கிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


வெஸ்ட் கார்க் சார்ட்டர்ஸ் எனும் அட்லாண்டிக் பெருங்கடலில் மீன்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் கடல் சுற்றுலா  மேற்கொள்ளும் நிறுவனம் சார்பாக, டேவ் எட்வர்ட்ஸ் என்பவர் ஐயர்லாந்து நாட்டின் அருகே இந்த மீனை சமீபத்தில் பிடித்துள்ளார். பிறகு, 8.5 அடி நீளம் உள்ள இந்த ராட்சத ட்யூனா மீனை, ஜப்பான் நாட்டில் 3 மில்லியன் யூரோ மதிப்பிற்கு விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.  

ஆனால், டேவ் எட்வர்ட்ஸ் குழுவினர், ராட்சத மீன்களை வர்த்தகப் பணிகளுக்கு பயன்படுத்துவதில்லை என்பதால், வலையில் சிக்கிய அந்த மீனை சில நிமிடங்கள் ஆய்வு செய்துவிட்டு, பிறகு புகைப்படம் எடுத்த கையோடு, கடலில் விட்டுவிட்டனர்.

அதன் எடை 270 கிலோ இருக்கும் எனவும், இதுதொடர்பான விரிவான வீடியோ அக்டோபர் 15 அன்று வெளியிடப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.