திமுக தென்சென்னை மாவட்டச் செயலாளரான ஜெ. அன்பழகனுக்கு கொரோனா அட்டாக்கா..?

கருணாநிதி பிறந்த நாள் விழாவை தி.மு.க.வினர் கொரோனா கொடூரத்துக்கு இடையிலும் கொண்டாடிவரும் நேரத்தில், தென்சென்னை மாவட்டச் செயலாளரான ஜெ.அன்பழகனுக்கு ‘கொரோனா’ அட்டாக் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.


ஏற்கெனவே ஜெ.அன்பழகனின் சகோதரர் சீனிவாசனுக்கு கொரோனோ இருந்திருக்கிறது. அவர் மூலம்தான் ஜெ.அன்பழகனுக்கு கொரோனா பரவியிருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால், இப்போது அவர் தி.மு.க.வினருக்கு சொந்தமான ரேலா மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ளார்.

ஏற்கெனவே நுரையீரல் கோளாறுகளால் ஜெ.அன்பழகன் அவதிப்பட்டு வருகிறார். அதனால், இப்போதே அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.

இன்று காலையில் ஸ்டாலின் நேரில் சென்று ஜெ.அன்பழகன் நலம் விசாரித்தார். இதையடுத்து பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனர். யாரையும் பார்க்கும் நிலையில் அன்பழகன் இல்லை என்று சொல்லப்படுகிறது. அவர் சீரியஸ் நிலையில் இருக்கிறார் என்று பரவும் செய்தியில் உண்மை இல்லை என்றே கூறப்படுகிறது.

விரைவில் குணம் அடைந்துவரட்டும்.